பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்
'தமிழரசன்'. இப்படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க,
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு
செய்துள்ளார்.
சென்ற ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் சில பல காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு இம்மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து
இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் 'கோடியில் ஒருவன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி',
'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'சலீம்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'மழை பிடிக்காத மனிதன்' என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார்.
இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.