'எனது அடுத்த இலக்கு'

'எனது அடுத்த இலக்கு'

3 mins read
541203aa-8542-496b-87dd-3024ceefb2ea
-

"அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொறி­யி­யல் பட்­டப்­படிப்பை முடித்­தி­ருந்­தா­லும், சினிமா மீதான ஆர்­வத்­தால் முழு­நேர நடி­கை­யா­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

பட்­டப்­ப­டிப்பை முடித்த பின்­னர் திரை­யு­ல­கில் சாதிக்க வேண்­டும் என்ற ஆர்­வத்­தின் கார­ண­மாக அமெ­ரிக்கா சென்று நடிப்பு சம்­பந்­த­மான படிப்பை முடித்­தா­ராம்.

"திரைத்­து­றை­யில் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­வ­தற்கு முன்பு தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஒன்­றில் வேலை பார்த்து வந்­தேன். கை நிறைய சம்­பளம் கிடைத்து வந்த நிலை­யில், ஒரு பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் வணிக ஆலோ­ச­க­ரா­க­வும் இருந்­தேன்.

எனி­னும், விதியை மாற்ற முடி­யாது என்­ப­தற்கு என் வாழ்க்­கை­யும் உதா­ர­ண­மா­னது. அத­னால்­தான் நடி­கை­யாகி ரசி­கர்­கள் மன­தில் எனக்­கான ஓர் இடத்­தைப் பெற்­றுள்­ளேன்," என்­கி­றார் சாக்‌ஷி.

இவர் பிறந்­தது உத்­த­ராஞ்­சல் என்­றால், படித்­தது, வளர்ந்­தது எல்­லாம் சென்­னை­யில்­தா­னாம். தந்தை தொழி­ல­தி­பர். தாயார் இல்­லத்­த­ரசி. ஒரு தங்­கை­ உள்­ளார்.

"நான்கு பேரைக் கொண்ட அமை­தி­யான குடும்­பத்­தில் பிறந்து செல்­ல­மாக வளர்க்­கப்­பட்­டேன். பள்­ளிப்­ப­ரு­வத்­தில் திரைத்­து­றை­யில் பெரி­தாக ஆர்­வம் இருந்­த­தில்லை. பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் வேலை பார்க்க வேண்­டும், லட்­சக்­க­ணக்­கில் சம்­பா­திக்க வேண்­டும் என்­பதே எனது இலக்­காக இருந்­தது.

"இரண்டு பெரிய நிறு­வ­னங்­களில் வேலை பார்த்த பின்­னர் சொந்­த­மாக தொழில் தொடங்க வேண்­டும் என்று ஆசைப்­பட்­டேன். அதற்­கான அனைத்து வாய்ப்­பு­களும் இருந்­தன. எனி­னும், நான் பணி­யாற்­றிய நிறு­வ­னத்­தில் நடந்த ஒரு நிகழ்ச்­சி­தான் எனது பாதையை மாற்­றி­யது," என்­கி­றார் சாக்‌ஷி.

அது ஒரு ஃபேஷன் நிகழ்ச்­சி­யாம். நண்­பர்­கள் வற்­பு­றுத்­தி­ய­தால் அதில் இவ­ரும் பங்­கேற்­றா­ராம்.

அந்த நிகழ்ச்­சிக்­காக வந்­தி­ருந்த விளம்­பர நிறு­வனத்­தின் அதி­காரி ஒரு­வர், 'விளம்­ப­ரங்­களில் நடிக்க விருப்­பமா' என்று கேட்க, தயக்­க­மின்றி தலை­ய­சைத்­துள்­ளார் சாக்‌ஷி.

அதன் பிறகு அடுத்­த­டுத்து விளம்­பர வாய்ப்­பு­கள் தேடி வர, நடிப்­பின் மீதான ஆர்­வம் அதி­க­ரித்­தது என்­கி­றார்.

"ஒரு நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­ய­ப­டியே, பகுதி நேர­மாக விளம்­ப­ரங்­களில் நடித்து வந்­தேன். என்னை திரை­யில் பார்க்­கப் பார்க்க திரைப்­ப­டங்­களில் நடிக்­கும் ஆசை அதி­க­ரித்­தது. அதற்­கேற்ப எனக்­கான வாய்ப்­பு­கள் தேடி வந்­த­போது தயங்­கா­மல் ஏற்­றுக்­கொண்­டேன்.

"எனது குடும்­பத்­தில் இதற்கு முன்பு யாருமே திரைத்­து­றை­யில் பணி­யாற்­றி­யது இல்லை. அத­னால் திரைத்­து­றை­யைச் சார்ந்த எந்­த­வி­த­மான நெளிவு சுளி­வும் தெரி­யா­மல் இருந்­தேன். அதன் பிறகு அனு­ப­வம் பல்­வேறு நுணுக்­கங்­க­ளைக் கற்­றுத் தந்­தது.

"முத­லில் 'ராஜா ராணி' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன். அதன் பின்­னர் 'யூகன்', 'திருட்டு விசிடி', 'ஆத்­யன்' என சிறிய பட்­ஜெட்­டில் தயா­ரான படங்­களில் நடிக்க வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. 'காலா' படத்­தில் ரஜி­னி­யின் மரு­ம­க­ளாக நடித்த பிற­கு­தான் ரசி­கர்­கள் என்­னைக் கவ­னிக்­கத் தொடங்­கி­னர்," என்று சொல்­லும் சாக்‌ஷி, சென்­னை­யில்­தான் வளர்ந்­தார் என்­றா­லும், தமி­ழில் சர­ள­மா­கப் பேச­ வ­ரா­தாம்.

சிறு வய­தில் தன்­னு­டன் தமி­ழில் பேசு­வ­தற்கு யாரும் இல்லை என்­ப­தும் பள்­ளி­யி­லும்­கூட தமிழ் நண்­பர்­கள் அமை­ய­வில்லை என்­ப­தும் இதற்கு முக்­கிய கார­ணம் என்­கி­றார்.

எனி­னும், சிறு வய­தில் இருந்தே யாரே­னும் தமி­ழில் பேசி­னால் புரிந்­து­கொள்­வா­ராம்.

பின்­னர் தமிழ் திரை­யு­ல­கில் நிலைத்து நிற்­க­வேண்­டும் என்­றால் தமி­ழில் பேச கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று தோழி­கள் ஆலோ­சனை வழங்­கி­யதை அடுத்து, தமி­ழில் பேச பயிற்சி மேற்­கொண்­டா­ராம்.

"வடஇந்தியப் பெண் என்றாலும் நன்றாகப் பேசுகிறீர்கள் என்று ரஜினி பாராட்டினார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. தனி நாயகியாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு," என்கிறார் சாக்‌ஷி.