ஆத்மிகா: காதல் தோல்வியால் அழுதேன்'

ஆத்மிகா: காதல் தோல்வியால் அழுதேன்'

1 mins read
d02427e5-c631-4432-a789-bd241795a8e4
-
Google News Preferred Icon

காதல் தோல்­வியை ஏற்க முடி­யா­மல் மன­மு­டைந்து போன­தாக இளம் நாயகி ஆத்­மிகா கூறி­யுள்­ளார்.

விளம்­பர நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசிய அவர், தன்னை காத­லித்­த­வர்­தான் திடீரென காதலை முறித்­துக்­கொண்டதா­கக் குறிப்­பிட்­டார்.

"காதல் தோல்­வியை தாங்க முடி­யா­மல் சில முறை இர­வெல்­லாம் அழு­தி­ருக்­கி­றேன். காதல் முடி­வுக்கு வர நான் எந்த வகை­யி­லும் கார­ண­மாக இல்லை. என்­னைக் காத­லித்­த­வர்­தான் உறவை முறித்­துக் கொண்­டார். தொடக்­கத்­தில் மன­மு­டைந்து போனா­லும் இன்­றுள்ள நிலையை எட்­டிப்­பி­டிக்க அந்­தக் காதல் முறி­வும் ஒரு கார­ண­மாக அமைந்­தது. அதற்­காக தற்­போது மகிழ்ச்சி அடை­கி­றேன்.

"எனக்கு சாதா­ர­ண­மான நல்ல மனி­த­ராக உள்ள ஒரு­வர் வாழ்க்­கைத் துணை­யாக அமைந்­தால் போதும். பணம், புகழ் ஆகி­ய­வற்­றில் எது முக்­கி­ய­மென்­றால் பணம்­தான் முக்­கி­யம் என்­பேன். ஏனெ­னில் அது­தான் யதார்த்­தம்," என்­றார் ஆத்மிகா.

பொது­வாக காதல், திரு­ம­ணம் குறித்து பேசு­வ­தற்கு சில நடி­கை­கள் தயங்­கு­வ­துண்டு. ஆனால் அது­போன்ற தயக்­கமோ, சங்­க­டமோ தனக்கு இல்லை என்­கி­றார்.

ஆத்­மிகா நடித்­துள்ள 'கண்ணை நம்­பாதே' படம் மார்ச் 17ஆம் தேதி வெளி­யா­கிறது.