இயக்குநர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தி நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
எதிர்பார்த்தபடி ஒத்துழைப்பு அளிக்காததால் அந்த இயக்குநரின் படத்தில் இருந்து தாம் நீக்கப்பட்டதாகவும் வித்யா குறிப்பிட்டுள்ளார்.
"என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படத்தின் இயக்குநரை சென்னை வந்தபோது சந்தித்தேன். ஏதேனும் உணவகத்தில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவரோ எனது தங்குவிடுதி அறையில் சந்திக்கலாம் என்று என்னைக் கட்டாயப்படுத்தினார்.
"அவரது எண்ணம் புரிந்தது. எனவே தங்கு விடுதி அறைக்குச் சென்றதும், கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று எதிர்பார்த்து சிறிதுநேரம் காத்திருந் தார். நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்ததும் கிளம்பிவிட்டார். அவரது படத்திலிருந்தும் என்னை நீக்கிவிட்டார்," என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.
திடீரென உடல் எடை யைக் குறைத்துள்ளார் நடிகை வரலட்சுமி. இது குறித்து பலர் கேள்வி எழுப்புவதாகவும் அவர் களுக்கு எல்லாம் பதில் அளித்து களைப்படைந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
"என் உடல்வாகு எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது எனது உரிமை. நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக் கொண்டே போனதால், சில உடல்நலப் பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனால் எடை குறைத்துள்ளேன்," என்கிறார் வரலட்சுமி.
தெலுங்குப் படம் ஒன்றில் ஏற்றுக்கொண்டுள்ள கதாபாத்திரத்துக்காகத்தான் வரலட்சுமி உடல் எடையைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழில் வெற்றிப் படங்களில் நடித்திருப்பதை அடுத்து, மஞ்சு வாரியர் தமது சம்பளத்தை ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளாராம். மலையா ளத்தில் நாயகியாக நடிப்பவர் களுக்கு இந்த அளவுக்கு அதிக சம்பளம் கொடுப்ப தில்லை. ஆனால், மஞ்சு வாரியர் அந்த நடைமுறையை மாற்றி உள்ளார். தனது ஊதியத்தைக் குறைத்துக் கொள்வதில்லை என்ற முடிவிலும் உறுதியாக உள்ளாராம்.

