'திருமண வாழ்க்கையும் தொழிலும் வெவ்வேறானவை'

'திருமண வாழ்க்கையும் தொழிலும் வெவ்வேறானவை'

1 mins read
1a7fc7d9-235a-4685-a532-a489a6706cd6
-

திரு­ம­ணத்­துக்குப் பிறகு கவர்ச்சி­யாக நடிக்­கக்­கூ­டாது என்று விதி­முறை ஏதும் இல்லை என்­கி­றார் காஜல் அகர்­வால்.

தற்­போது 'இந்­தி­யன் 2' உள்­ளிட்ட சில படங்­களில் நாய­கி­யாக நடித்து வரும் அவர் அண்மை­யில் ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அப்­போது, கவர்ச்­சி­யாக நடிப்பது குறித்து ஒரு ரசி­கர் கேள்வி எழுப்­பி­னார்.

"அதற்­குப் பதி­ல­ளித்த காஜல், கவர்ச்­சி­யாக நடிக்­கும் விஷ­யத்­தில் தானும் தனது கண­வ­ரும் வெளிப்­ப­டை­யாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"காதல் காட்­சி­கள் என்­றால் சக நடி­க­ரு­டன் நான் நெருக்­க­மாக நடிக்க வேண்­டி­யி­ருக்­கும். அவ்­வாறு நடிக்க மாட்­டேன் என்று சொல்ல முடி­யாது.

"திரு­மண வாழ்க்­கை­யும் செய்யும் தொழி­லும் வெவ்­வேறானவை. கதைக்­கேற்ப கவர்ச்சி காட்ட வேண்­டி­யிருந்தால் அதற்கு உடன்­பட வேண்­டி­யி­ருக்­கும். திரு­ம­ணத்­துக்குப் பிறகு நான் நடிக்க மாட்­டேன் என்று வதந்தி பர­வி­யது. அதற்கு எனது செயல்­கள் மூலம் பதில் அளித்து இருக்­கி­றேன்," என்­றார் காஜல் அகர்­வால்.

தென்­னிந்­திய மொழி­களில் முன்­னணி நாய­கி­யாக வலம் வந்த காஜல் அகர்­வால் 2020ஆம் ஆண்டு தொழிலதி­பர் கவு­தம் கிச்­ச­லுவை காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்­ளது.