தனது திரைப்பயணத்தின் முக்கியமான, சுவாரசியமான காலகட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார் ஜெயம் ரவி.
தாம் நடிக்கும் அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரவி பல வெற்றிப் படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். 'பொன்னியின் செல்வன்' படம் அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
கௌரவ வேடத்தில் நடித்தாலும் பெரும் பொருள்செலவில் உருவாகும் படம் என்றாலும், ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிப்பதுதான் தனது வழக்கம் என்கிறார் ஜெயம் ரவி.
"இயக்குநர் மணிரத்னம் என்னைத் தேர்வு செய்தபோது, சில தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் படம் வெளியான பிறகு கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு என்று பாராட்டுகள் குவிந்தன.
"எப்போதுமே நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக உண்மையாக உழைப்பேன். அண்மையில் வெளியான 'அகிலன்' படம் வரை இதுதான் எனது அணுகுமுறை. எனது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் யாராலும் குறைகூற முடியாது," என்று சொல்லும் ஜெயம் ரவி, ஒரு கதாபாத்திரத்தின் வெற்றிக்கு அதன் தோற்றம் பெரும் பங்களிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
'அகிலன்' படத்துக்காக பல மணிநேரம் கடும் வெயில், உப்பு நீரில் நிற்க வேண்டியிருந்ததாம். துறைமுகப் பணியாளராக நடிக்கும்போது, ரசிகர்கள் அதை ஏற்கும் வகையில் தனது தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாராம்.
"கதாபாத்திரத்தின் வெற்றிக்கு அதன் தோற்றம்தான் ஐம்பது விழுக்காடு பங்களிப்பதாக நம்புகிறேன். அகிலன் கதாபாத்திரத்துக்காக எனது தோற்றத்தை மாற்ற வேண்டியிருந்தது. இயக்குநரின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது முக்கியம்.
"படங்களைத் தேர்வு செய்வதில் எனது அனுபவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் திரைத்துறை சார்ந்து நான் படித்த படிப்பும் கைகொடுக்கிறது. மேலும், என்னுடன் பணியாற்றும் கலைஞர்கள், ரசிகர்களிடம் இருந்தும்கூட பலவற்றைக் கற்றுக்கொள்கிறேன்.
"ஒரு படத்தின் வெற்றிக்கு மேலும் பல அம்சங்கள் துணைநிற்கின்றன. அந்தப் படம் எந்த சமயத்தில் வெளியாகிறது, அச்சமயம் ரசிகர்களின் மனப்போக்கு எப்படி உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக 'கோமாளி' படம் வெளியானபோது 1990களில் நிகழும் கதை என்பதை மனதிற்கொண்டு அதற்கேற்ப காட்சிகளை அமைத்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
"ஒரு படத்தில் நாயகன், கௌரவ வேடம் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. இரண்டுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிக்கிறேன்," என்கிறார் ஜெயம் ரவி.
'அகிலன்' படத்தின் படப்பிடிப்பு சென்னை துறைமுகத்தில் நடந்தபோது, தினமும் மூன்று மணிக்கெல்லாம் கண்விழித்துவிடுவாராம். மூன்றரை மணிக்கு படப்பிடிப்பு தொடங்குமாம்.
"கடும் வெயில் நேரத்தில் துறைமுகத்தில் நிற்பது எவ்வளவு கடினமானது என்பது எல்லாருக்கும் தெரியும். படக்குழுவைச் சேர்ந்த பலர் இடுப்பளவு உப்பு நீரில் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.
"இப்படி மூன்று நாள்கள் இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்துக்காக கிரேன் வாகனத்தை இயக்க கற்றுக்கொண்டேன். கடும் வெயிலை எப்படிச் சமாளிக்க முடிந்தது என என் நண்பர்கள் கேட்டனர். நான் சென்னை பையன். அதனால் எத்த கைய சூழலையும் சமாளிக்க முடியும் என் றேன்," என்று கூறி சிரிக்கிறார் ஜெயம் ரவி.
, :
தமிழகத்
ஜெயம் ரவி

