பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக
செய்திகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து தமன்னா வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது என்று காட்டமாக பதிலளித்து உள்ளார்.
நடிகை தமன்னா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தவர். தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துவரும் தமன்னா, இணையத் தொடர்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜய், அஜித், சூர்யா,
விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா.
'பாகுபலி' திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு புகழைத்
தந்தது. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்
கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
அண்மையில் அவரது 'பப்ளி பவுன்சர்' டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'லஸ்ட் ஸ்டோரி 2' படத்திலும் நடிக்க உள்ளார்.
மேலும் 'போலா ஷங்கர்' படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். தமன்னா உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பவர்.
சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சியுடன் புகைப்படங்களைப் பதிவிட்டு
வரும் தமன்னா, அண்மையில் ஒரு விருந்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிற்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
அதற்கு பதிலளித்த தமன்னா, "விஜய் வர்மாவுடன் காதலா எனக் கேட்கிறீர்கள்? நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அன்றுமுதல் வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை. சொல்வதற்கும் ஒன்றுமில்லை.
"எனக்கு கரீனா கபூர், தபு ஆகியோரை மிகவும் பிடிக்கும். குறிப்பாக தபுவை மிகவும் பிடிக்கும்.
"தபு தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை.
"பெண்கள் இந்த வயதிலும் அவரைப்போல அழகாக இருக்க வேண்டும். நான் விஜய் வர்மாவைக் காதலிக்கவில்லை. தபுவைத்தான் காதலிக்கிறேன்.
"ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடிகைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுமாதிரி எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். உண்மையிலேயே எனக்கு திருமணம் நடந்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்," என்று வருத்தத்துடன்
பேசினார்
அவர்.

