'குல்மொகர்'

1 mins read
1ed2d876-a097-47cb-965d-38f512ffe003
-

34 ஆண்­டு­க­ளா­கத் தாங்­கள் வாழ்ந்த 'குல்­மொ­கர்' வீட்டை விற்­று­விட்டு அடுக்­கு­மா­டி­யில் வாழும் வாழ்க்­கையை நோக்­கிச் செல்­கிறது பத்ரா குடும்­பம்.

குடும்­பத் தலைவி ஷர்­மிளா தாகூர், தான் இனி கூட்­டுக் குடும்­பத்­து­டன் வாழப்­போ­வ­தில்லை என்­றும் பாண்­டிச்­சே­ரி­யில் தனி வீட்­டில் வசிக்­கப்­போ­வ­தா­க­வும் அறி­விக்­கி­றார்.

இதைத் தொடர்ந்து நிக­ழும் சம்­ப­வங்­களும் பெரிய குடும்­பம் புதைத்து வைத்­தி­ருக்­கும் ரக­சி­யங்­க­ளும்­தான் டிஸ்னி+ஹாட்ஸ்­டா­ரில் வெளி­யா­கி­யுள்ள இந்­தப் படத்­தின் கதை.

12 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு திரை­யில் தோன்­றும் ஷர்­மிளா தாகூர் தன் அட்­ட­காச நடிப்­பால் நிறைவு தரு­கி­றார்.

மனோஜ் பாஜ்­பாய் - சிம்­ரன் ஜோடி உணர்­வு­பூர்­வ­மான நடிப்­பால் நெகி­ழச் செய்­கின்­ற­னர். மக­னாக சுரஜ் சர்மா, கௌரவ வேடத்­தில் அமோல் பாலே­கர் நன்­றாக நடித்து இருக்­கின்­ற­னர்.

மேற்­கத்­திய பாதிப்­பில் சிக்­கித் தவிக்­கும் பாலி­வுட்­டி­லி­ருந்து ஒரு நெகிழ்ச்­சி­யான இந்­தி­யக் கதை என்ற வகை­யில் இது 'குடும்­பங்­கள் கொண்­டா­டும் வெற்றி!' என்­கி­றார்­கள் படத்­தைப் பார்த்­த­வர்­கள்.