நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே நடிகர் ஜெய்யை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்டது. நீண்ட காலம் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
எனினும், இருவருமே காதலிப்பதாகவோ காதலிக்கவில்லை என்றோ உறுதி செய்யவில்லை.
பின்னர், முன்னணி இயக்குநர் ஒருவருடன் அஞ்சலி காத வயப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் அதை திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பேசப்படுகிறது.
திரையுலகில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கில் உருவாகும் 'ராமாயணம்' படத்துக்காக சாய் பல்லவி இரண்டு ஆண்டுகள் தொடர் கால்ஷீட் ஒதுக்கி யதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக உள்ளது 'ராமாயணம்' படம்.
இப்படத்தில் நடிக்கக் கேட்டு சாய் பல்லவியை அணுகி யது படக்குழு. தொடக்கத்தில் மறுத்த அவர், படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடித்த முன்வந்தாராம். இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, சாய் பல்லவி மற்ற படங்களில் நடிக்கமாட்டார் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ரஞ்சித்தின் வேகமும் திட்டமிடலும் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகச் சொல்கிறார் விக்ரம். பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். தனது நீண்ட திரைப்பயணத்தில் 'தங்கலான்' படம் மிக முக்கியமான படைப்பு என்கிறார் விக்ரம்.

