ரஜினி படத்தில் செந்தில்

ரஜினி படத்தில் செந்தில்

1 mins read
57192c7b-cbac-474b-bed1-16afb12087c3
-

மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.

கடந்த காலங்களில் ரஜினி நடிக்கும் படங்களில் செந்தி லுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், தனது மகள் இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இதில் விக்ராந்தும் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.

மூத்த நடிகர் செந்திலும் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அவரும் விஷ்ணு விஷாலும் நிறைய காட்சிகளில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இத­னி­டையே, ரஜி­னி­யும் செந்­தி­லும் இணைந்து நடிப்­பது போன்­றும் சில காட்­சி­களை உரு­வாக்கி உள்­ளா­ராம் ஐஸ்­வர்யா.

கடைசி நேரத்­தில் இந்த மாற்­றத்தை அவர் செய்­துள்ள போதி­லும், மக­ளுக்­காக ரஜினி மறுப்பு ஏதும் சொல்­ல­வில்லை எனத் தக­வல்.