'கண்ணை நம்பாதே' படத்தின் கதையைக் கேட்டதும் மனதளவில் மிகவும் ஒன்றிப் போய்விட்டதாகச் சொல்கிறார் அப்படத்தின் நாயகி ஆத்மிகா.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவரது நடிப்பில் உருவாகி உள்ள படம் இது.
இந்நிலையில், இந்தப் படம் தனது நடிப்புத்திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது என்கிறார் ஆத்மிகா.
"இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். மிகவும் கனமான கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்துள்ளதாக நம்புகிறேன்.
"இது எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படைப்பாகும். அதனால் முழு கவனத்தையும் செலுத்தி நடித்துள்ளேன்.
"இந்தப் படம் வெளியானதும் தமிழ்த் திரையுலகில் நானும் ஒரு முன்னணி நடிகையாக மாறிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
"ஓர் உணர்வுபூர்வமான படத் தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக படத்தின் இயக்குநருக்கும் நாயகன் உதயநிதிக்கும் நன்றி.
"உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த அனுபவம் மிகச் சிறப்பா னது. பல்வேறு சவால்களுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே அவர் இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது கதா பாத்திரம் ரசிகர்களால் நீண்ட காலம் நினைவு கூரப்படும்," என்கிறார் ஆத்மிகா.
'கண்ணை நம்பாதே' படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உட்பட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள னர்.
'கண்ணை நம்பாதே' படத்தில் உதயநிதி, ஆத்மிகா.

