தமிழ்த் திரையுலகில் தாம் புறக்கணிக்கப்படுவதாக நடிகை வரலட்சுமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக தம்மை ஒதுக்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் இதுகுறித்து யோசிப்பதை தாம் கைவிட்டுவிட்டதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"'சர்கார்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தேன். அதன் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும் என்று பலரும் கூறினர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
"தமிழ்த் திரையுலகினர் என்னைக் கண்டு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. இயக்குநர்கள் அல்லது கதாநாயகர்களுக்கு நான் நடிப்பதால் என்ன சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதும் புரியவில்லை.
"எங்கேயோ எதுவோ இடிக்கிறது. ஆனால், உடன் நடிக்கும் நடிகர்களை வரலட்சுமி தன் நடிப்பால் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் என்று பலர் பேசிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை அது உண்மையாக இருக்கக்கூடும்.
"என்னைப் பொறுத்தவரை, எனக்கு எங்கு சோறு கிடைக்கிறதோ அங்கு போகிறேன். அது மட்டுமே காரணம். மற்றபடி, நான் அரசியல் பேசவில்லை.
"தெலுங்கில் எனக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. தேவையற்ற விஷயங்கள் குறித்து அங்கு பேரம் பேசுவதில்லை. கலைஞர்களின் மதிப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள்.
"உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். ஆனால், ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று தெலுங்கில் யாருமே நிபந்தனைகள் விதித்ததில்லை. உண்மையில், தங்களுடைய படங்களில் நானும் இணைவதை பெருமையாகக் கருதுகிறார்கள்," என்கிறார் வரலட்சுமி.
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் தெலுங்கு படம் 'அனுமன்'. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது.
வரலட்சுமியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் அதன் காரணமாக படத்தின் வியாபாரம் அசத்தலாக இருக்கும் என்றும் தெலுங்கு ஊடகங்கள் கூறியுள்ளனவாம்.
"வரலட்சுமி நடிக்கும் படங்கள் நிச்சயம் வசூல் ரீதியில் வெற்றிபெறும் என்கிறார்கள். தெலுங்கில் அந்த அளவுக்கு நல்ல பெயர் எடுத்திருக்கிறேன்.
"எனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறேன். உண்மையில், தமிழில் அந்த அளவுக்கு நான் வளரவில்லை. அண்மையில் நான் நடித்த 'கொன்றால் பாவம்', 'அரசி' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் எனக்கு தமிழில் புதிய பாதையை வகுத்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
"எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நடிக்கத் தயார். ஆனால், தமிழ் சினிமா பல நல்ல கலைஞர்களை இழந்து வருகிறது. யாருக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே என்னைப் போல் மேலும் பலர் தெலுங்கு பக்கம் போகிறோம்," என்று சொல்லும் வரலட்சுமி, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார்.
மேலும், தமது நடிப்பு ஒரே மாதிரியாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக உள்ளாராம்.
"'சண்ட கோழி-2', 'சர்கார்' ஆகிய இரு படங்களிலும் வில்லியாக நடித்துள்ளேன்.
எனினும் இரு கதா பாத்திரங்களுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் காண்பிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு அதை சாதிக்கு முயற்சி செய்தேன்.
"என்னுடைய இந்த மெனக்கெடலும் உழைப்பும்தான் இன்று வரை திரையுலகில் நீடிக்க கைகொடுக்கிறது. தெலுங்கு ஊடகங்கள் இதைப் புரிந்துகொண்டு என்னைப் பாராட்டுகின்றன.
"மிக விரைவில் தமிழ் ஊடகங்களும் என்னைப் பாராட்டும் என நம்புகிறேன். அந்த நாள் தொலைவில் இல்லை என்றும் நம்புகிறேன். நல்ல வாய்ப்பு களுக்காக அவசரப் படாமல் காத்திருப்பேன்," என்று நம்பிக்கை யுடன் பேசுகிறார் வரலட்சுமி.
, :
தமிழகத்

