நடிகை ராஷ்மிகாவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மன் கில்லும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக உள்ளார். அண்மைக்காலமாக இவரது ஆட்டம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ராஷ்மிகாவின் நடிப்பு தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளது என்றும் சுப்மன் கில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம், சுப்மன் கில் மீது ஈர்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்கும் ஈர்ப்பு உள்ளது," என்று கண்ணடித்துச் சிரித்தபடியே பதிலளித்தார் ராஷ்மிகா.
இதையடுத்து இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
பெற்றோர் காலமான பிறகு தாம் ஓர் அனாதையைப் போல் உணர்வதாக முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார். இப்போது பேச்சுத் துணைக்குக்கூட ஆளின்றித் தவிப்பதாக அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் விசித்ரா. போட்டியில் பங்கேற்பது தனது மன அழுத்தத்தை ஓரளவு குறைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"என்னுடைய தந்தை முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். ஒருவேளை முகத்தைப் பார்த்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் அந்த கொள்ளையர்கள் என் தந்தையைக் கொன்றி ருக்கலாம். அதேபோல்
எனக்கு பக்கபலமாக இருந்து வந்த எனது தாயும் அண்மையில் இறந்துவிட்டார்.
"என் தந்தை இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி அவரது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்த சில நாள்களில் அவர் இறந்துவிட்டதால், அந்த காயம் பற்றி என் அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
"என் தந்தையின் விரலில் காயம் பட்டதற்கே வெகுவாக வருந்திய என் அம்மா, அவர் கொலை செய்யப்பட்டபோது எவ்வளவு வலியை அனுபவித்து இருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது," என்று கண்ணீர்மல்க தனது பேட்டியில் விசித்ரா குறிப்பிட்டுள்ளார்.
'பிச்சைக்காரன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி என்ற கதாபாத்திரத்தை ரசிகர் களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு சுவரொட்டியை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி.
"நண்பா... இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலைப்படுங்க, முடிந்தால் பயப்படுங்கள். இவனைப் பற்றி இன்னும் நிறைய சொல்கிறேன்," என்று சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிக்கிலி சுவ ரொட்டி மிரட்டலாக உள்ளது என ரசிகர்கள் அவரது பதிவுக்குப் பின்னூட்ட மிடுள்ளனர்.
'பிச்சைக்காரன்' முதல் பாகம் விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

