'கிண்டலுக்கு ஆளானேன்'

'கிண்டலுக்கு ஆளானேன்'

1 mins read
8e3f5779-6628-4d10-9d82-a309089e7bbe
-

இந்­திய அழ­கிப் போட்­டி­யில் பங்­கேற்­ற­போது தாம் மிகுந்த கேலி, கிண்­டல்­க­ளுக்கு ஆளான­தாக நடிகை டாப்சி கூறி­யுள்­ளார்.

அழ­கிப் போட்டி தொடர்­பாக நிகழ்ந்த அர­சி­ய­லைக் கண்டு தமக்கு அரு­வருப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் ஆரம்ப காலத்­தில் இந்­திய அழகிப் போட்­டி­களில் பங்­கேற்­றேன். அப்­போது நிகழ்ந்த சில சம்­ப­வங்­க­ளால் மிக­வும் வேதனை அடைந்தேன்.

"போட்டி சம­யத்­தில் எனது சுருட்டை தலைமுடி­யைப் பார்த்து அங்­குள்ள பலர் ஏளனம் செய்­தார்­கள். இப்­ப­டிப்­பட்ட சுருட்டை முடி­யோடு இந்திய அழகிப் போட்­டி­யில் வெற்­றி­பெற முடி­யாது என்­றும் கேலி செய்­த­னர்.

"இன்­னும் கொடுமை என்ன­வென்­றால் பெரிய நிறு­வனங்­க­ளைச் சேர்ந்த சிலர் என்­னி­டம் வந்து ஒரு­வேளை இந்­திய அழகி போட்­டி­யில் வெற்றி­பெற்­றால் எங்­கள் நிறுவனங்­க­ளின் சார்­பில் மூன்று ஆண்­டு­கள் பணி­யாற்ற வேண்டும்.

"எனக்­குக் கிடைக்­கும் வரு­மா­னத்­தில் 30 விழுக்­காட்டை அவர்­களுக்­குக் கொடுக்க வேண்டி இருக்­கும் என்­றும் பயமுறுத்­தி­னர்.

"அந்த நாள்­கள் அனைத்­துமே என்­னைப் பொறுத்­த­வரை கெட்ட கன­வைப் போன்­றவை. அவற்றை மறக்க விரும்­பு­கி­றேன்," என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் டாப்சி.