நடிகர் ரோபோ சங்கர் திடீரென உடல் இளைத்திருப்பது அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
நல்ல உடல்வாகுடன் இருந்த அவர் மெலிந்த உருவத்தில் காணப்படும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
எதனால் அவர் உடல் எடை குறைந்துள்ளது என்பது தெரியவில்லை. ஏதேனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் குறைத்தாரா, அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் ரோபோ சங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவரவில்லை. தற்போது நான்கு புதுப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
விரைவில் தனது உடல் இளைப்பு குறித்து அவர் விளக்கமளிப்பார் எனக் கூறப்படுகிறது.