இரு பாகங்கள்; ரூ.40 லட்சம்

‘விடு­தலை’ படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் சூரிக்கு மொத்­தம் ரூ.30 லட்­சம்­தான் சம்­ப­ள­மா­கப் பேசப்­பட்­டுள்­ள­தாம்.

நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க கோடிக்­க­ணக்­கில் சம்­ப­ளம் பெறு­கி­றார் சூரி. சில சம­யங்­களில் நாளொன்­றுக்கு இவ்­வ­ளவு சம்­ப­ளம் என்ற ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லும் நடிப்­ப­தா­கத் தகவல்.

எனி­னும் இயக்­கு­நர் வெற்­றி­மாறன் படத்­தில் நடிப்­பது பெரும் வாய்ப்பு என்­ப­தால் சம்­ப­ளம் குறித்­தெல்­லாம் அவர் யோசிக்­க­வில்லை. முப்­பது லட்­சம் சம்­ப­ளம் என்று கூறி­ய­தும் மறுப்­பே­தும் சொல்­லா­மல் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். அதன் பிறகு ‘விடு­தலை’ படம் இரண்டு பாகங்­க­ளாக உரு­வா­கும் என வெற்­றி­மா­றன் அறி­வித்­த­போது, சூரி­யின் சம்­ப­ள­மும் இரு­ம­டங்­கா­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் இரு பாகங்­க­ளுக்­கும் சேர்த்து அவ­ருக்கு ரூ.40 லட்­சம்­தான் ஊதி­ய­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாம்.

இதற்கிடையே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த பிறகும், நான்கு நாள்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளார் வெற்றிமாறன். வேறு படத்துக்கான படப்பிடிப்பில் இருந்து மீண்டும் ‘விடுதலை’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சூரி.

இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், ‘விடுதலை’ படத்தில் அவரது நடிப்பு பிரமாதம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இதையடுத்து, அவரை நாயகனாக நடிக்க வைக்க முன்னணி தயாரிப்பாளர்கள் இப்போதே முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!