விஜய் நடித்து வரும் 'லியோ' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதனிடையே, இப்படத்தில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
'லியோ' படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் உள்ளனர். மூத்த நடிகர் அர்ஜுன், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் ஆகிய மூவரும் வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி உள்ளனராம்.
இந்நிலையில் 'கேஜிஎஃப்' படத்தை அடுத்து 'லியோ' படத்திலும் இந்தி நடிகர் சஞ்சய் தத் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்யுடன் மோதியுள்ளார். இருவரும் திரையில் ஒருசேர தோன்றும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், திட்டமிட்ட படப்பிடிப்பை நடத்துவதில் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநரைத் தாம் பார்த்ததில்லை என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார் விஜய்.
'லியோ' படக்குழுவில் தொடக்கத்தில் 180 பேர் இடம்பெற்றிருந்தனர். அனைவரும் சிறப்பு விமானத்தில் காஷ்மீருக்குச் சென்று, அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை ஐநூறு பேராக அதிகரித்தது.
மார்ச் 25ஆம் தேதியுடன் படப்பிடிப்பை முடித்துவிடுவதாக விஜய்யிடமும் தயாரிப்புத் தரப்பிடமும் உறுதி அளித்திருந்தாராம் லோகேஷ்.
தயாரிப்பாளர் சிரமத்தைப் புரிந்துகொண்டு செலவைக் கட்டுப்படுத்துவதிலும் திட்டமிட்டதைவிட குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பதிலும் கெட்டிக்காரர் என்ற பெயர் லோகேஷுக்கு உண்டு. 'லியோ' படத்திலும் இதை அவர் நிரூபித்துள்ளார்.
திட்டமிட்டபடி காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ள அவர், தாம் சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே படப்பிடிப்பை முடிக்க உள்ளார். விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டை வீணடிக்காமல் செயல்படும் அவரது திறமையை 'லியோ' தயாரிப்புத் தரப்பு வெகுவாகப் பாராட்டி உள்ளது.
இதற்கிடையே, இந்தப் படத்தில் தனது தோற்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் விஜய் மிகக் கவனமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முப்பது வெவ்வேறு விதமான தோற்றங்களை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார்.
தனது முந்தைய படங்களைப் போல் இதிலும் நரை முடியுடன் (சால்ட் அண்ட் பெப்பர்) விஜய் தோற்றமளிக்கும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு நடிகர் சஞ்சய் தத் வந்தபோது, அவரை விஜய் வரவேற்ற காணொளிப் பதிவு ஒன்றும் வெளியானது. அதிலும் நரைமுடியுடன்தான் அவர் காட்சியளித்தார்.
இந்தத் தோற்றத்தை இறுதி செய்வதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டதாம். அந்த இரு வாரங்களில் மட்டும் முப்பது வெவ்வேறு தோற்றங்கள் தமக்குப் பொருந்துமா என அவர் சோதித்துப் பார்த்துள்ளார்.
, :
தமிழகத்

