திரைத் துளி­கள்

 கடந்த ஆறு ஆண்டு களாக மது அருந்து வதில்லை என்று நடிகை ஷ்ருதிஹாசன் கூறியுள்ளார். தற்போது வாழ்க்கையில் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது விருப்பப் பட்டியலில் மது வகைகள் ஏதும் இல்லை. எப்போதாவது ‘ஆல்கஹால்’ இல்லாத பீர் அருந்துவேன்,” என்று இன்ஸ்டகிராமில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியபோது ஷ்ருதி குறிப்பிட்டார்.

 ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ‘மேன்’ என்ற திகில் படத்தை இகோர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய வர். இப்படத்தில் ஆரி வில்லனாக நடிக்கிறார். “ஆண்மை என்பது அகங்கார மாக மாறி பெண்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இதை எதிர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டம்தான் இப்படத்தின் கதை. ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தி உள்ளார். இதில் வித்தியாச மான ஹன்சிகாவைப் பார்க்கலாம். முதல் காட்சி தொடங்கி இறுதிக்காட்சி வரை ரசிகர்களின் கண்கள் திரையை விட்டு அகலாது,” என்கிறார் இயக்குநர் இகோர்.

இந்தப் படத்துக்கு சரண்யா பாக்யராஜ் திரைக்கதை எழுதி உள்ளார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

 பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் சிறப்பாக நடந்தேறியது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாந்தனுவின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் இப்படம் சிறந்த படைப்பாக உருவாகி உள்ளதாக படக்குழு நம்பிகை தெரிவித்துள்ளது.

 ‘பகாசூரன்’ படத்தை இயக்கியுள்ள மோகன் ஜி தனது அடுத்த படத்தில் ரிச்சர்ட் நாயகனாக நடிப்பதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமாம்.

 முன்னாள் நடிகைகள் சிம்ரனும் லைலாவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். ‘சப்தம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் புதுப் படத்தை ‘ஈரம்’ அறிவழகன் இயக்குகிறார்.

முன்னதாக இப்படத்தின் நாயகியாக லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்தனர். அதன் பிறகு லைலா இணைந்தார். இப்போது முக்கிய கதா பாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சிம்ரனும் லைலாவும் இணைந்து நடித்திருந்தனர். ‘சப்தம்’ படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!