சிம்பு நடித்திருக்கும் 'பத்து தல' படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, "உணர்வுபூர்வமான
காட்சிகளிலோ நிகழ்ச்சிகளிலோ நான் அழுது விடுவேன். ஆனால் உங்களுக்காக நான் இன்று அழக்கூடாது என்று நினைத்து வந்திருக்கிறேன்," என்று கூறி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'பத்து தல'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி
சங்கர் ஆகியோர் பேசினர்.
சிம்பு பேசுகையில், "கன்னடத்தில் இந்தப் படத்தில்
சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படத்தை ஒத்துக்கொண்டதற்கு காரணம் கவுதம்தான்.
"சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களைக் கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு உண்டு. ஏனென்றால் தமிழ்த் திரையுலகில் தட்டிக் கொடுப்
பதற்கு யாரும் இல்லை; தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
"எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்சினைகளை சந்தித்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
"எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமைகிறதோ இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
"கவுதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்
கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
"ஏஆர் ரஹ்மான் சார் என் காட்பாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன்.
ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்துள்ளார்.
"எல்லோரும் என்னிடம், முன்பு எப்போதும் வேகமாக பேசுவீர்கள். இப்போது எல்லாம் அமைதியாக பேசுகிறீர்களே! என்று கேட்கிறார்கள். அதற்கு காரணம் உண்டு.
"முன்பெல்லாம் 'நான் யார் என்று தெரியுமாடா?' என்ற அளவுக்கு பேசி
யிருக்கேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள்.
"அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால்தான் அதுபோன்று கத்தி பேசுவது எல்லாம் நடந்தது.
"மாநாடு' படத்தைக் கொண்டாடி, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தி இருக்கிறீர்கள். பிறகு எப்படி கத்தி பேச முடியும்? பணிவாகத்தான் பேச வேண்டும். இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான்.
"இனிமேல் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமேல் நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள்.
"சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமேல் என் ரசிகர்களை நான் அழுது, தலைகுனிய விடமாட்டேன்.
"இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இல்லை; நிஜத்திலும் இல்லை," என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கவுதம் கார்த்திக், "பத்து தல' என் வாழ்க்கையில் முக்கியமான படம். இயக்குநர் கிருஷ்ணா சார், நிறைய கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்.
"எனக்கு இந்தப் படத்தில் முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் இந்தப் படத்திற்கு பெரிய பலம்," என்றார் அவர்.
அவரைத் தொடர்ந்து இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், "சிம்பு அண்ணன், எனக்கு லண்டனைச் சுற்றிக் காட்டினார். அவரின் ஆன்மீக பயணம் பற்றி நிறைய சொன்னார்.
"அவரின் கை, கால் எல்லாமே நடிப்பதைப் பார்த்தேன். நான் பார்த்த அவரின் நடிப்பை நீங்களும் பார்க்க விரும்பினால் மார்ச் 30ஆம் தேதி திரையரங்கினில் வந்து பாருங்கள்," என்று கூறினார்.

