இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர்
சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்தப் படத்தில் நடிகர்கள் போஸ் வெங்கட், புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இந்த படம் ரசிகர்
களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படம் இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் மறு
பதிப்பு செய்யப்பட உள்ளது. தெலுங்கில் சசிகுமார் வேடத்தில் நடிகர் வெங்கடேஷும் இந்தியில் நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளனர். இரண்டு மொழிகளிலும் 'அயோத்தியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாகி மூன்று வாரங்களாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் நாயகன் சசிகுமார் படத்தின் இயக்குநர் மந்திர மூர்த்திக்கும் தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டினார்.

