இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிகர் அதர்வாவின் இளைய சகோதரர் ஆகாஷ்தான் கதாநாயகன். சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அதிதி. தாம் விஷ்ணுவர்த்த னின் ரசிகை என்றும் அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையும் என கற்பனைகூட செய்ததில்லை என்றும் கூறுகிறார்.
திரைப்படங்களில் நடித்த படியே இணையத் தொடர்களி லும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் வாணி போஜன். அவரும் விஜி சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ள 'செங்களம்' என்ற இணையத் தொடரின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அரசியல், திகில் கதையுடன் உருவாகி உள்ள இத்தொடர் மிகச்சிறந்த படைப்பாக உருவாகி உள்ளது என்கிறார் வாணி. தொடரின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கதையை விவரித்தபோது வாணிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். எனினும் பின்னர் உடல்நலம் குன்றியதால் தம்மால் நடிக்க இயலாது என்று கூறியுள்ளார். "ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் எனக்காகக் காத்திருந்தனர். எனக்கு பெரும் ஆதரவளித்து நாயகியாக நடிக்க வைத் துள்ளனர். இதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர் வாதமாகக் கருதுகிறேன்," என்று நெகிழ்கிறார் வாணி போஜன்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறு கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். இளைய ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை இரு பாகங்களாக உருவாக்கி உள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் பட வெளியீட்டுக் கான சுவரொட்டிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பளம் தொடர்பான விவகாரத்தில் துணை நடிகர்களுக்கான முகவர், கோபத்தில் அந்த துணை நடிகையை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

