சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
நேற்று முன்தினம் கார்த்திகியிடம் பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தபோது ஆஸ்கர் விருதை அவரிடம் காண்பித்து மகிழ்ந்ததாக கார்த்திகி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயைப் பிரிந்த குட்டி யானைகளையும் அந்த யானைகளைப் பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் வாழ்க்கையை யும் மையப்படுத்தியும் உருவாகி இருந்தது.

