இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் தந்தை மகனாக நடித்திருப்
பதாகவும் 1975 காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வரும் படமாக இருக்கும் என்று கூறினார் இயக்குநர்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பஹிரா' ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படம் பற்றி அவர் கூறு
கையில், "இது சண்டைகள் நிறைந்த குண்டர் கும்பல் படம். 1975லிருந்து 1995 வரையிலான காலகட்டங்களில் நடக்கும் கதை.
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில்,
ஒய்.ஜி.மகேந்திரன், ரிதுவர்மா, அபிநயா, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மலேசியா நடிகர் டி.எஸ்.ஜே என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள்.
"குண்டர் கும்பல்களுக்குள் நடக்கும் சண்டைகள்,
துரோகங்கள், வன்மங்கள், பாசப்பிணைப்புகள், குடும்ப உணர்வுகள் என்று பல திசைகளிலும் படம் பயணிக்கும். இடையே 1965 காலகட்டமும் வந்துபோகும். அத்தனை
நடிகர்களின் தோற்றங்களும் அண்மையில் வெளியான
சுவரொட்டியில் இருந்தது. அதைப் பலரும் பாராட்டினர்.
"விஷாலிடம் `எனிமி' படப்பிடிப்பில்தான் கதையைச் சொன்னேன். உடனே விஷால் நடிக்க ஒத்துக்கொண்டார். 'எனிமி' படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
"எஸ்.ஜே.சூர்யாவிடம் கதையைச் சொல்லச் சென்றேன். அவர் இப்போது வேண்டாம் என்று கூறி தட்டிக் கழித்தார். விஷால்தான் எஸ்.ஜே.சூர்யாவிடம் 'கதையைக் கேளுங்கள். உங்களுக்கு பிடித்துப்போகும்," என்று கூறி கதையைக் கேட்க வைத்தார்.
"கதையைக் கேட்டதும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் ஜாக்கி பாண்டியனாக தந்தையும் மதன் பாண்டியனாக மகனுமாக அவரே நடித்திருக்கிறார்.
"அவரைப்போல செல்வராகவனுக்கு முக்கியமான கதாபாத்திரம். அவர் அந்த கதாபாத்திரத்தில் விரும்பி நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
"சென்னையில் பதினைந்து நாள்கள் தொடர்ந்து படப்
பிடிப்பு நடத்திக்கொண்டு இருந்தோம்.
"ஒரு பெரிய சுவரை, ஒரு லாரி வேகமாக வந்து இடித்துக்கொண்டு நிற்க வேண்டும். அந்த காட்சி எடுக்கும்போது விஷால், எஸ்.ஜே.சூர்யா, 350 துணை நடிகர்கள் அனைவரும் இருந்தார்கள்.
"காட்சிப்படி எஸ்.ஜே.சூர்யா விஷாலை உதைத்ததும் விஷால் தூர போய் விழுவார். அப்போது ஒரு லாரி நேராக வரவேண்டும்.
"ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வரத்தொடங்கியது. விஷால் படப்பிடிப்பு நடக்கிறது என்று தரையில் குப்புற படுத்துக் கிடந்தார். ஆனால் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்த எங்களுக்கு விபரீதம் நடக்கப்போகிறது என்று தெரிந்தது.
"நல்லவேளையாக லாரி ஓட்டுநர் வண்டியை எங்கள் பக்கம் திருப்பினார். நாங்கள் உடனே குதித்து தப்பித்தோம். கடவுள் அருளால் நாங்கள் உயிர் தப்பினோம். அந்தப் பதினைந்து நிமிடத்தில் அத்தனை பேரும் ஆடிப்போய்விட்டோம். மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. நாங்கள் தப்பித்தது தெய்வச் செயல்தான்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.