சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார் சாயிஷா.
தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும்போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் ஜோடியாக 'டெடி' படத்தில் சாயிஷா நடித்திருந்தார்.
அண்மையில் சமூக வலைத்தளத்தில் தான் நடனம் ஆடிய காணொளிகளை சாயிஷா பதிவிட்டு இருந்தார். இவர் மிகவும்
நளினமாக நடனம் ஆடுவதால் 'பத்து தல' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
திருமணத்திற்குப் பிறகு குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த சாயிஷா இந்தப் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கிறார்.
அதனால் அவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். ஆனால் சாயிஷா, "தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் படங்களில் கவர்ச்சியாகவும் நடிப்பேன்," என்று கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.


