ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருக்கு பெரிய அளவில் புகழைத் தேடி தருவது அவருக்கு அமையும் பாடல்களும் அதில் அவர் ஆடி இருக்கும் நடனமும்தான்.
எந்த விழாக்களுக்குச் சென்றாலும் அங்கே ராஷ்மிகா 'புஷ்பா' படத்தில் ஆடிய 'சாமி சாமி' பாடலுக்கு சில நிமிடங்களாவது, குறிப்பாக அந்த வித்தியாசமான நடன அசைவுகளுடன் அவரை ஆடச்சொல்லி கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் வலைத்தளத்தில் உரையாடிய ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் "நான் உங்களை நேரில் சந்திக்கும்போது நீங்கள் என்னுடன் சேர்ந்து 'சாமி சாமி' பாடலுக்கு நடனம் ஆடவேண்டும்," என்று தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, "இந்த பாடலுக்கு பல நிகழ்ச்சிகளில் பலமுறை ஆடிவிட்டேன். இனிமேல் இந்தப் பாடலுக்கு ஆடப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன். ஆனால் ஒருவேளை உங்களை நான் நேரில் சந்திக்கும்போது வேறு ஏதாவது விஷயங்களை செய்வோம்," என்று பதில் அளித்துள்ளார்.

