'மனதை உலுக்கிய ஒரு வரி'

'மனதை உலுக்கிய ஒரு வரி'

3 mins read

இயக்­கு­நர் டான் சாண்­டியை தீவிர சினிமா ரசி­கர்­கள் நிச்­ச­யம் நினை­வில் வைத்­தி­ருப்­பார்­கள். சிம்­பன்­ஸி­யு­டன் ஜீவா நடித்த 'கொரில்லா' படத்தை இயக்­கி­ய­வர். இப்­போது பிர­பு­தேவா, ரெஜினா கஸன்ட்­ராவை வைத்து 'ஃபிளாஷ்­பேக்' என்ற படத்தை இயக்கி வரு­கி­றார்.

"காதலை எல்­லா­ரும் அழ­கான விஷ­ய­மா­கப் பார்க்கி­றோம் எனில் காம­மும் அழ­கான விஷ­யம்­தான். காதலை அழ­கி­ய­லோடு சொன்ன படங்­களை எளி­தில் பட்­டி­ய­லிட்­டு­வி­டு­வோம். 'அழகி', 'பிரே­மம்', '96' என இந்­தப் பட்­டி­யல் நீளும். இவை­யெல்­லாம் உணர்­வு­பூர்­வ­மான படைப்­பு­கள். ஒவ்­வொரு காட்­சி­யை­யும் ரசித்­துப் பார்த்து அனு­ப­வித்­தோம்.

"காத­லைப் போலவே காம­மும் அழ­கான அம்­சம்­தான். இந்­தப் படம் இக்க­ருத்தை வலி­யு­றுத்­தும் படைப்­பாக உரு­வா­கிறது," என்­கி­றார் டான் சாண்டி.

'ஃபிளாஷ்­பேக்' படத்­தில் இடம்­பெ­றும் பல காட்சி­களு­டன் ரசி­கர்­கள் தங்­களை எளி­தில் பொருத்­திப் பார்க்க இய­லும் என்று குறிப்­பி­டு­ப­வர், படம் முழு­வ­தும் மன­தில் ஒரு­வித இத­மான உணர்வை ஏற்­ப­டுத்­தும் என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

இதை­யெல்­லாம் கவ­னத்­தில் கொண்டு­தான் படத்­துக்­குப் 'ஃபிளாஷ்­பேக்' என்று தலைப்பு வைத்­த­தா­க­வும் விளக்­கம் தருகிறார்.

"பதின்­ம வய­தில் தோன்­றும் காமத்தை நாம் அனை­வ­ருமே கடந்து வந்­தி­ருப்­போம். அந்த உணர்வை அழ­கி­ய­லோடு சொன்ன படங்­கள் மிகக்­கு­றைவு. இந்­தப் படத்­தைப் பார்க்­கும் அத்­தனை பேருக்­கும் இதி­லுள்ள சம்­ப­வங்­கள் நிச்­ச­யம் மனதை வரு­டும். பழைய சம்­ப­வங்­களை அசை­போட வைக்­கும்.

"ஒரு நல்ல கதை, தனக்­கான ஆள்­களை தானே தேடிக்­கொள்­ளும் என்­பார்­கள். அது உண்­மை­தான். இந்­தக் கதை­யைத்­தான் என் முதல் பட­மாக இயக்கத் திட்­ட­மிட்­டி­ருந்­தேன். ஆனால் அந்­தச் சம­யத்­தில் ரசி­கர்­கள் நகைச்­சுவைப் படங்­களை அதி­கம் நேசித்­த­தால், 'கொரில்லா' படத்தை இயக்­கி­னேன்.

"பிறகு தயா­ரிப்­பா­ளர் ரமே­ஷி­டம் இந்­தக் கதை­யைச் சொன்­ன­தும், உற்­சாகத்­து­டன் தயா­ரிக்க முன்­வந்­தார். இதோ, படம் விரை­வில் திரை­காண உள்­ளது," என்­கி­றார் டான் சாண்டி.

பல கதா­நா­ய­கர்­க­ளி­டம் 'ஃபிளாஷ்­பேக்' கதை­யைச் சொல்­லி­யி­ருந்­தா­ராம். ஆனால் அவர்­கள் இப்­ப­டிப்­பட்ட கதை­யில் நடிக்­க தயங்கி உள்­ள­னர். ஆனால் பிர­பு­தே­வாவோ, கதை­யைக் கேட்­ட­தும் வியந்து போனா­ராம்.

"மிக ஆழ­மா­க­வும் வித்­தி­யா­ச­மா­க­வும் யோசித்­தி­ருக்­கி­றீர்­கள் என்று அவர் மன­தா­ரப் பாராட்­டி­னார். கதைப்­படி அவர் எழுத்­தா­ள­ரா­க வரு­கி­றார். பிர­பு­தேவா இப்­ப­டிப்­பட்ட பாத்­தி­ரங்­க­ளைத்­தான் ஏற்­பார், இப்­ப­டித்­தான் நடிப்­பார் என்று ரசி­கர்­கள் நினைக்­கின்­ற­னர். அத்­த­கைய எண்­ணத்தை இந்­தப் படம் மாற்­றி­வி­டும்.

"எழுத்­தா­ளர் கதா­பாத்­தி­ரத்­துக்கு தன்னை தேர்ந்­தெ­டுக்க என்ன கார­ணம் என்று கேட்­டார். அடிப்­ப­டை­யில் அவ­ரும் இயக்­கு­நர் என்­ப­தால் எழுத்து எளி­தில் வச­மா­கும். அத­னால்­தான் அவரை நாய­க­னாக்­கி­ய­தா­கச் சொன்­னேன். என் பதிலை மிக­வும் ரசித்­தார்.

"இந்­தக் கதையை பல நாய­கி­க­ளி­டம் சொல்லி இருக்­கி­றேன். எல்­லா­ருமே அரு­மை­யான கதை என்று பாராட்­டி­னார்­களே தவிர, படத்­தில் நடிக்க முன்­வ­ர­வில்லை. ஆனால் ரெஜினா எந்­த­வி­த­மான தயக்­க­மும் இன்றி நடிக்க முன்­வந்­தார்.

"பிற நாய­கி­கள் நடிக்­கத் தயங்­கி­யதை அவ­ரி­டம் மறைக்­க­வில்லை. ஆனால் ரெஜி­னாவோ, 'இதெல்­லாம் வாழ்க்­கை­யில் நடக்­கக்­கூ­டிய விஷ­யங்­கள்­தானே... எதற்­கா­கத் தயங்க வேண்­டும்' என்று சொன்­ன­து­டன், 'எப்­போது படப்பிடிப்பு' என்று நடிக்­கத் தயா­ரா­கி­விட்­டார்," என்­கி­றார் டான் சாண்டி.

கதைப்­படி ஆசி­ரியை கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளா­ராம் ரெஜினா. இவ­ரைத் தவிர தெலுங்­குத் திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த அனு­சுயா பரத்­வா­ஜும் இரண்­டா­வது நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இத­னி­டையே, 'ஃபிளாஷ்­பேக்' படம் ஆங்­கி­லப் படம் ஒன்­றின் தழு­வல் என்ற ஒரு தக­வல் சமூக ஊட­கங்­களில் உலா வரு­கிறது. இது­கு­றித்து கேட்­டால், "இப்­ப­டிப்­பட்ட தவ­றான தக­வல்­கள் பர­வு­வது இயல்­பு­தான்," என்­கி­றார் டான் சாண்டி.

"என்­னி­ட­மும் சிலர் இது­கு­றித்து கேட்­ட­னர். ஹாலிவுட்­டில் மோனிக்கா பெலூச்சி நடித்த 'மெலினா' படச்சாய­லில் எனது படம் உரு­வா­வ­தா­கக் கூறு­கின்­ற­னர். அஜித்­தின் 'துணிவு' பட முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யா­ன­போது, 'இது மணி ஹெய்ஸ்ட் இணை­யத்­தொ­ட­ரின் தழு­வல்' என்று கூறி­னர். ஆனால் படம் வெளி­யா­னதும் முற்­றி­லும் வேறு கதை­யாக இருந்­தது.

"மகாத்மா காந்தி­யின் சுய­சரி­தை­யான 'சத்­திய சோதனை' நூலை வாசித்தேன். அதில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு வரி என் மனதை உலுக்­கி­யது. பதின்ம வய­தில் அவர் காமத்­தைக் கடக்க முடி­யா­மல் அவ­திப்­பட்­டது குறித்து விவ­ரித்­தி­ருப்­பார். அப்­போது என் மன­தில் தோன்­றிய கதைக்­கரு தான் இப்படம்," என்­கி­றார் டான் சாண்டி.

, :

தமிழகத்  