அனைவரையும் கண்கலங்க வைத்த 'விருமாண்டி' நாயகி

அனைவரையும் கண்கலங்க வைத்த 'விருமாண்டி' நாயகி

2 mins read
e58054f2-0443-4d9f-ac26-d5ecf38f13a6
-

'விரு­மாண்டி' படத்­தில் கமல்­ஹாசனுக்கு ஜோடி­யாக நடித்த அபி­ராமி, நீண்ட இடை­வெளிக்குப் பிறகு நடித்­துள்ள படம் 'பாபா பிளாக்‌ ஷீப்'. யூடி­யூப் தளத்­தில் பிர­ப­ல­மாக உள்ள ராஜ்­மோ­கன் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மா­கும் படம் இது.

பள்­ளிக் குழந்­தை­க­ளின் மழலைத்த­னம், விளை­யாட்­டுத்­தனம், சேட்­டை­கள், அவர்­க­ளு­டைய வாழ்­வில் உள்ள இன்ப துன்­பங்­கள் ஆகி­ய அனைத்­தை­யும் உள்­ள­டக்­கிய திரைக்­க­தை­யுடன் கள­மி­றங்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் ராஜ்­மோ­கன்.

இதில் அபி­ரா­மி­யின் நடிப்பு கண்­க­லங்க வைக்­கும் வகை­யில் அற்­பு­த­மாக இருந்­தது என ஒட்டு­மொத்த படக்­கு­ழு­வும் பாராட்­டு­கிறது.

"இது பள்­ளிக் குழந்­தை­க­ளின் வாழ்வை விவ­ரிக்­கும் அழ­கான படைப்பு. ஒரு குழந்­தையைப் பிர­ச­வம் முதல் பள்­ளிக்­கூ­டம் வரை சுமக்­கும் தாயின் கதா­பாத்­தி­ரத்தை ஏற்று இயல்­பாக நடிக்­கக்­கூ­டிய ஒரு­வரை எதிர்­பார்த்தேன். அப்­போது அபி­ரா­மி­யின் நினைவு வந்­தது.

"அவரை அணுகி கதையை விவ­ரித்­த­போது நல்ல கதை, கன­மான கதா­பாத்­தி­ரம் என்று கூறி நடிக்­கச் சம்­ம­தித்­தார். அனு­ப­வம் வாய்ந்த நடிகை என்­றா­லும் படப்­பி­டிப்­பின்­போது ஒவ்­வொரு காட்சி­யி­லும் எவ்­வாறு நடிக்க வேண்டும் என்­பது குறித்து என்­னி­டம் விவா­தித்­தார்.

"ஓர் அறிமுக நடிகையைப் போல் அவர் காட்டிய ஆர்வமும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

"உணர்­வு­பூர்­வ­மான ஒரு காட்சி­யில் அவ­ரது நடிப்­பைக் கண்டு மொத்த படக்­கு­ழு­வி­னரும் கண்­க­லங்­கி­ய­ப­டியே, எழுந்து நின்று கைதட்­டி­னர். அந்­தக் காட்சியை திரை­யில் காணும் ரசி­கர்­களும் நிச்­ச­யம் கண்­க­லங்­கு­வர். இந்­தப் படம் வெளி­யா­ன­தும் அபி­ராமி தமிழ்த் திரை­யு­ல­கில் நிச்சயமாக மீண்­டும் ஒரு வெற்றி வலம் வரு­வார்," என்­கிறார் இயக்­கு­நர் ராஜ்­மோ­கன்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாக உள்ளது.