பின்னணிப் பாடகி சித்ராவை 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிப்பதிவுக் கூடத்தில் பார்த்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற புதிய திரைப்படத்துக்காக வைரமுத்து எழுதியுள்ள பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். "அந்தப் பாடலைப் பதிவு செய்தபோது சித்ராவைப் பார்த்தேன். 39 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே குரல். அதே கனிவு, அதே பணிவு," என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
'பாகுபலி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு இயக்குநர் ராஜமவுலி தன்னை அணுகியதாக பழம்பெரும் நடிகை காஞ்சனா தெரி வித்துள்ளார். இரண்டு நாள் கால்ஷீட் ஒதுக்க தாம் ரூ.5 லட்சம் சம்பளம் கேட்டதாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு ஊதியம் கொடுக்க முடியாது என்று சொல்லி ராஜமவுலி தன்னை ஒதுக்கிவிட்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "என்னைப் போன்ற ஒரு மூத்த நடிகைக்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாத நிலையில் ராஜமவுலி இருக்கிறாரா எனத் தெரியவில்லை. ரூ.5 லட்சம் என்பது அவருக்கு பெரிய தொகையா. என்னைப் போன்ற நடிகைக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் அது நல்ல முன்னுதாரணமாக அமையாதா?" என்று காஞ்சனா கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை டாப்சி கவர்ச்சிகரமாக உடையணிந்திருந்தார்.
அப்போது அவர் அணிந்த நெக்லசில் கடவுள் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. இது தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
"கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லசை எப்படி அணியலாம்," என்று கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

