தற்போது 'கேப்டன் மில்லர்' என்று தலைப்பிடப் பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படப் பிடிப்பு காரணமாக விலங்கு களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில்
எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
"புலிகள் காப்பகத்துக்கு அருகில் அதிக உயரத்தில் கோபுரங்கள், விளக்குகள் அமைக்கின்றனர். இதனால் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும். களக்காடு பகுதியில் உள்ள கால்வாயையும் படக்குழுவினர் சேதப்படுத்தி உள்ளனர்,"
என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் தமது நடிப்பில் வெளியாகி உள்ள 'கண்ணை நம்பாதே' படத்தை திரையரங்கில் தன் தாத்தா வுடன் கண்டு ரசித்துள்ளார் நடிகை ஆத்மிகா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். "உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பதுதான் மகிழ்ச்சி. 90 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் தனது பேத்தி படத்தைப் பார்க்க சிரமமின்றி படிக்கட்டு களில் ஏறினார். விலைமதிப் பற்ற இந்த தருணங்கள்," என்று ஆத்மிகா கூறியுள்ளார்.
அண்மையில் வெளியான தமிழ்ப் படங்களின் இந்தி மறு பதிப்பு உரிமை பெருந் தொகைக்கு விலை போயி ருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சந்தை மதிப்பைவிட இருமடங்கு தொகைக்கு அவை விற்கப்பட்டதாகத் தகவல்.
'சூரரைப் போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி, நடிகர் ரஜினியின் தீவிர ரசிகை என்பது தெரியும். பல பேட்டிகளில், ரஜினி வீட்டின் முன்பு நின்று 'செல்ஃபி' படம் எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதாம். உடனே, அவருடன் படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாக அபர்ணா கூற, ரஜினியும் சம்மதிக்க, உடனே நான்கைந்து படங்கள் எடுத்துக் கொண்டுள் ளார். அவற்றுள் ஒரு படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள அவர், ரஜினியுடனான அந்தச் சந்திப்பு தம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
'பசங்க' படத்தில் அன்புக்கரசு பாத்திரத்தில் நடித்தவர் கிஷோர். அதை யடுத்து 'துரோகி', 'கோலி சோடா', 'நெடுஞ்சாலை', 'சகா' உள்ளிட்ட படங் களிலும் நடித்தார். கிஷோ ருக்கும் சின்னத்திரை நடிகை பிரீத்தி குமாருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்துள்ளது. சென்னையில் நடந்த திருமண நிகழ்வில் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

