'கவர்ச்சிதான் எங்களைப் பற்றிப் பேச வைக்கிறது'

'கவர்ச்சிதான் எங்களைப் பற்றிப் பேச வைக்கிறது'

1 mins read
4e7aace5-c420-45cd-abb3-542c3d56fdb8
-

கவர்ச்­சி­க­ர­மா­னது என்­ப­தால்­தான் திரை­யு­ல­கம் குறித்து மற்ற துறை­க­ளைச் சார்ந்­த­வர்­கள் அதி­க­மா­க­வும் ஆர்­வ­மா­க­வும் பேசு­வ­தா­கச் சொல்­கி­றார் ரெஜினா.

அண்­மை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், தமது திரைப்பய­ணத்­தில் நல்­லவை, கெட்­டவை, மறக்க இய­லா­தவை எனப் பல்­வேறு அனு­ப­வங்­களை எதிர்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"நான் சினி­மா­வில் அறி­மு­க­மாகி 12 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தொடக்­கத்­தில் நான் பார்த்த திரை­யு­ல­குக்­கும் இப்­போதுள்ள நிலைக்­கும் இடையே பெரிய மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்ளன.

"நான் பெற்ற அனு­ப­வங்­கள் என்­னைப் பக்­கு­வப்­ப­டுத்தி உள்­ளன. நிறைய ரசி­கர்­கள் கிடைத்­துள்­ள­னர். நல்ல நடிகை என்று பெயர் வாங்க முடிந்­தது.

"தமிழ், தெலுங்கு எனப் பல மொழி­களில் திரைப்­ப­டங்­கள், இணை­யத் தொடர்­கள் என்று இடை­வி­டா­மல் நடித்து வரு­கிறேன். ஒரு நடி­கை­யாக நான் தொட்­டுள்ள உய­ரம் மகிழ்ச்சி அளிக்­கிறது. இதே வேகத்தில் செல்ல முடிவெடுத்துள்ளேன்," என்­கி­றார் ரெஜினா.

'மிஸ்டர் சந்திரமவுலி' படத்தில் ரெஜினா, கௌதம் கார்த்திக்.