பக்கத்து வீட்டுப் பெண்

பக்கத்து வீட்டுப் பெண்

2 mins read
43a44db3-5686-4413-8026-3e255c30efd8
-

வாழ்க்­கை­யில் வெற்­றி­பெற சரி­யான நேரத்­தில், சரி­யான இடத்­தில் இருக்கவேண்­டி­யது அவ­சி­யம் என்­கி­றார் ஸ்‌ரேயா.

தென்­னிந்­திய மொழி­களில் அசத்­திய இவர், இப்­போது இந்­தி­யி­லும் நல்ல வாய்ப்­பு­க­ளைப் பெற்று வரு­கி­றார்.

'ஆர்­ஆர்­ஆர்' படத்தை அடுத்து, 'திரிஷ்­யம் 2' இந்தி பதிப்­பி­லும் தனது நடிப்­பால் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்ள ஸ்‌ரேயா, தனது நீண்ட திரைப்­ப­ய­ணத்­தில் இன்­னும் சாதிக்க வேண்டியவை இருப்­ப­தாக நம்­பு­கி­றா­ராம்.

"ரசி­கர்­களும் கட­வு­ளின் ஆசி­யும் இல்­லை­யென்­றால் என்­னால் இவ்­வ­ளவு ஆண்­டு­கள் திரை­யு­ல­கில் நீடித்­தி­ருக்க முடி­யாது. நடி­கை­யாக இருக்க கட­வு­ளின் ஆசி தேவை. அது எனக்­குக் கிடைத்­தி­ருப்­ப­தாக நம்புகிறேன்.

"ரசி­கர்­கள் என்னைத் தங்களுடைய பக்­கத்து வீட்­டுப் பெண்­ணைப் போல் பார்க்­கி­றார்­கள். பல மொழி­களில் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருப்­பது மன­நி­றைவு அளிக்­கிறது. இன்­னும்­கூட இயக்­கு­நர்­கள் எனக்­கேற்ற கதா­பாத்­தி­ரங்­களை உரு­வாக்­கு­கி­றார்­கள். எனக்­கு­ரிய வாய்ப்­பு­க­ளை­யும் தரு­கிறார்கள். அவர்­கள் அனை­வ­ருக்­குமே நன்றி," என்­கி­றார் ஸ்‌ரேயா.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு திரை­யு­ல­கில் வெற்றி­க­ர­மாக வலம் வரும் நடி­கை­க­ளின் எண்­ணிக்கை மிகக்­கு­றை­வு­தான். அதி­லும் கதா­நா­ய­கி­யாக நீடிப்­ப­வர்­களை விரல்விட்டு எண்ணி­வி­ட­லாம். ஆனால், தமக்கு அந்­தப் பிரச்­சினை இல்லை என்­கி­றார்.

"நான் எப்­போ­துமே மற்ற கதா­பாத்­தி­ரங்­களுக்கு வழங்­கப்­படும் முக்­கி­யத்­து­வம் குறித்து யோசிப்­ப­தில்லை. நான் ஏற்று நடிக்­கும் வேடம் முத­லில் என்­னைக் கவர வேண்­டும். அடுத்து என்னை அத்­த­கைய கதா­பாத்­தி­ரத்­தில் ரசி­கர்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­களா என்று யோசிப்­பேன். அது மிகச்­சி­றிய பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் பர­வா­யில்லை.

"ஒரு படத்தை உரு­வாக்­கு­வது சாதா­ரண பணி­யல்ல. திரை எழுத்­தா­ளர்­கள் சில நடி­கர்­களை மன­திற்­கொண்டு கதை­களை வடி­வ­மைக்­கி­றார்­கள். சில சம­யங்­களில் அதில் தோல்வி ஏற்­ப­ட­லாம். ரசி­கர்­க­ளின் மனப்­போக்கை எளி­தில் கணித்­து­விட முடி­யாது.

"என்­னைப் பொறுத்­த­வரை தர­மான, கன­மான கதை­க­ளை­யும் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் விரும்­பு­வேன். ரசி­கர்­களும் அப்படித்­தான் எதிர்­பார்க்­கி­றார்­கள்," என்­கி­றார் ஸ்ரேயா.

தற்­போது கன்­ன­டத்­தில் 'கப்சா' என்ற படத்­தில் நடித்­திருப்­ப­வர், நாய­கியாக முன்­னி­லைப்­ப­டுத்­தும் இரண்டு படங்­களில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம். எனி­னும் சம்­பள விஷ­யத்­தில் கறா­ராக இருக்­க­மாட்­டார் என்ற நல்ல பெயரைச் சம்­பா­தித்­துள்­ளார்.

"நான் படத்­த­யா­ரிப்­பில் ஈடு­ப­டப் போவ­தாக சிலர் தவ­றான தக­வல்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர். அதற்கு வாய்ப்பே இல்லை.

"படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ப­தும் எனக்­குத் தெரிந்த நடிப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தும்­தான் எனக்­குத் தெரிந்த வேலை­கள். வேறு எதி­லும் நான் இதுவரை ஈடு­பட்­ட­தில்லை. அத­னால் படத்தயா­ரிப்­பில் ஈடுபடும் திட்­டம் ஏதும் இல்லை.

"திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் நடிக்க வந்­தி­ருக்­கி­றேன் என்­றால் திரைத்­துறை மீதான எனது ஈடு­பா­டும் அர்ப்பணிப்பும்­தான் கார­ணம்.

"எந்த மொழி­யி­லும் நடிக்க நான் தயார். இனி­மேல் திரை­யு­ல­கத்­துக்கு மொழிசார்ந்த எல்லை என்­பது கிடை­யாது. நீங்­கள் எந்த அள­வுக்கு ஒரு படத்தை நேசிக்­கி­றீர்­கள், எவ்­வ­ளவு அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைக்­கி­றீர்­கள் என்­பது மட்­டுமே கவ­னிக்­கப்­படும். இதைப் புரிந்துகொண்­டால் சாதிக்­க­லாம்," என்­கி­றார் ஸ்‌ரேயா.

அண்மைய ஒரு பேட்டியில் ரஜினி மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என்று கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிடுபவர், மற்ற நாயகர்களும் பெரிதும் சாதித்து வருவதாகச் சொல்கிறார்.

ஸ்‌ரேயா

, :

தமிழகத்  