இயக்குநர் பாரதிராஜா முதன் முறையாக தனது மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரனின் 'வெண்ணிலா' நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
பாரதிராஜாவின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத இறுதியில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முன்னதாக, வரும் 31ஆம் தேதி பத்து முன்னணி இயக்குநர்கள் ஒன்றுசேர்ந்து இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிடுகின்றனர்.
"எனது இயக்கத்தில் தந்தை நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் ரசித்துப் பாராட்டும் வகையில் இப்படம் உருவாகும். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப் பங்காற்றும் என்றும் மனோஜ் கூறுகிறார்.

