தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால்களைத் தொட்டு வணங்கும் ராஷ்மிகா

1 mins read
f80f2708-eb8a-452c-804b-d83687c91da5
-

வார்த்­தை­கள் மிக­வும் வலிமை வாய்ந்­தவை என்­றும் அவற்றைக் கொண்டு ஒரு­வரை வாழ்க்­கை­யில் உய­ரத்­துக்­குக் கொண்டு செல்ல முடி­யும் என்­றும் கூறு­கிறார் ராஷ்­மிகா மந்­தனா.

அதே­ச­ம­யம், சில வார்த்­தை­களில் உள்ள கடுமை ஒருவரை அழித்­து­வி­டும் வாய்ப்­பும் உள்ளது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"வாழ்க்­கை­யில் சில விஷ­யங்­கள் மிக முக்­கி­ய­மா­ன­வை­யா­கக் கரு­து­கி­றேன். நாள்­தோறும் காலை தூங்கி எழுந்­த­தும் என் செல்­லப் பிரா­ணி­களுடன் நேரத்­தைச் செல­வி­டு­கி­றேன்.

"நண்­பர்­க­ளைச் சந்­திப்­பது மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. வார்த்தை­கள் மிக­வும் சக்தி வாய்ந்­தவை என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தால்­தான், யார் என்ன சொன்­னா­லும் கவ­ன­மா­கக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

"பணி முடிந்து வீட்­டிற்கு வந்­தால் அனை­வ­ர­து பாதங்­க­ளை­யும் மரி­யா­தை­யு­டன் தொட்டு வணங்­கு­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கி­றேன்.

"எனது உத­வி­யா­ளர்­கள், பணி­யா­ளர்­க­ளின் கால்­க­ளைத் தொட்டு வணங்­கு­வ­தும் என் வழக்­கம். ஏனெ­னில் நான் யாரை­யும் வேறு­ப­டுத்­திப் பார்க்க விரும்­ப­வில்லை. நான் அனை­வரை­யும் மதிக்­கி­றேன்," என்­கிறார் ராஷ்­மிகா.