அழகும் அறிவும் சேர்ந்த பெண் பிரியா

3 mins read
fcb38675-3de1-4eff-aada-16dbedef5820
-

சம்­பள விஷ­யத்­தில் மற்ற நடி­கை­க­ளைப்­போல பெரி­தாக பிரச்­சினை ஏதும் செய்­யா­த­வர் என்ற பெயரை எடுத்­தி­ருக்­

கி­றார் பிரியா பவானி சங்­கர். அத­னா­லேயே பல படங்­களில் அவர் தொடர்ந்து நடித்து வரு­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

சின்­னத்­திரை நடி­கை­யாக இருந்து பின்­னர் பெரிய திரை­யில் காலடி வைத்­த­வர் இவர். சின்­னத்­தி­ரைக்கு வரு­வ­தற்கு முன்பு இவர் செய்தி வாசிப்­பா­ள­ராக இருந்­த­வர். அத­னா­லேயே மீடியா குறித்­தும் பொது விஷ­யங்­கள் உள்­ளிட்ட அனைத்து அறி­வும் கொண்டுள்ள ஓர் அழ­கான நாய­கி­தான் பிரியா பவானி சங்­கர். சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக கடந்த சில ஆண்­டு­க­ளாக வலம் வரு­கி­றார்.

தற்­பொ­ழுது இயக்­கு­நர் கிருஷ்ணா இயக்­கத்­தில் சிம்பு, கவு­தம் கார்த்­திக், கவு­தம் மேனன் நடித்­துள்ள 'பத்து தல' படத்­தில் கவு­தம் கார்த்­திக்கு ஜோடி­யாக பிரியா பவானி சங்­கர் நடித்­துள்­ளார்.

வணிக நோக்கத்துடன் எடுக்கும் படங்­களில் நாய­கி­க­ளின் காட்­சி­கள் குறை­வா­கத்­தான் இருக்­கும் என்று முன்­னோட்ட நிகழ்ச்­சி­யின்­போதே தனது கதா­பாத்­தி­ரம் படத்­தில் எப்­படி இருக்­கும் என்­பது பற்றி குறிப்­பாக உணர்த்தி இருந்­தார்.

பிரியா பவானி சங்­கர் தொடர்ந்து பல சிறு வரவுசெலவு படங்­களில் நடித்து வரு­கி­றார். தனது சம்­ப­ளத்தை மொத்­த­மாக கோடி­களில் இன்­ன­மும் அவர் அதி­க­ரிக்­க­வில்லை என்றே கூறு­கின்­ற­னர்.

'பத்து தல' படம் பல ஆண்­டு­

க­ளுக்கு முன்பே ஆரம்­பிக்­கப்­பட்ட நிலை­யில், இந்தப் படத்­தில் நடிக்க சிம்­பு­வுக்கே 5 கோடி ரூபாய் சம்­ப­ளம் என்­றும் படத்­தின் நாய­கன் கவு­தம் கார்த்­திக்கு 1 கோடி ரூபாய் சம்­ப­ளம் என்­றும் நாய­கி­யாக நடித்­துள்ள பிரியா பவானி சங்­க­ருக்கு 70 லட்­சம் ரூபாய் சம்­ப­ளம் என்­றும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

இந்நிலையில் 'பத்து தல' படத்­தில் ஒரே ஒரு பாட­லுக்கு குத்­தாட்­டம் போட்­டுள்ள நடி­கர் ஆர்­யா­வின் மனை­வி சாயிஷாவுக்கு மட்­டும் அதி­க­பட்­ச­மாக ரூ.40 லட்­சம் வரை சம்­ப­ளம் கொடுத்­தி­ருப்­ப­தா­க­வும் கூறு­கின்­ற­னர். ஆனால், சாயிஷா அண்­மை­யில் நடிக்க ஒப்­பந்­தம் ஆன­தால்­தான் அவ­ருக்கு இப்பொழுது உள்ள நிலைக்கு ஏற்ற சம்­ப­ளம் பேசப்­பட்­டது என்று சொல்­லப்­ப­டு­கிறது.

பல கோடி ரூபாய் சம்­ப­ளத்தை எல்­லாம் கேட்­கா­மல், சரி­யான சம்­ப­ளத்தை வாங்­கிக் கொண்டு தயா­ரிப்­பா­ளர்­க­ளின் விருப்ப நாய­கி­யாக மாறி உள்ள பிரியா பவானி சங்­க­ருக்கு அடுத்­த­டுத்து பல படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

ஒரு கையில் உள்ள 5 விரல்­களை அப்­ப­டியே காட்­டும் அள­வுக்கு நடிகை பிரியா பவானி சங்­கர் கைவ­சம் 'பத்து தல' படத்­திற்கு பிறகு 5 படங்­கள் உள்­ளன. 'பொம்மை', 'ருத்­ரன்', 'டிமான்டி காலனி 2', 'இந்­தி­யன் 2', 'ஜீப்ரா' எனும் தெலுங்கு படத்­தி­லும் நடித்து வரு­கி­றார் பிரியா பவானி சங்­கர்.

"படத்­தின் இயக்­கு­நர் கிருஷ்ணா அனைவரையும் மரி­யா­தை­யாக நடத்­து­வார். சிம்­புக்கு என்ன மரி­யாதை கொடுக்­கி­றாரோ அதே மரி­யாதை மூத்த நடி­கைக்­கும் தரு­வார். சிம்­புக்கு நடிக்க தெரி­யும். அதில் அவர் சிறந்த ஆளுமை உள்­ள­வர். ஆனால் மூத்த நடி­கைக்கு அது சரியா வராது. அவர்­க­ளி­டம் கிருஷ்ணா அனு­ச­ரித்து போவார். அது­தான் மனித தன்மை. அதை அனைவரிடமும் எதிர்­பார்க்­கி­றேன். நானும் அதை எல்­லோ­ரி­ட­மும் கொடுக்­கி­றேன். இது­போன்ற மனப்­பான்மை எல்­லோ­ரி­ட­மும் உடனே வந்­து­வி­டாது. அதை திரைத்துறையில் நான் தாம­த­மா­கத்­தான் உணர்ந்­தேன்," என்று கூறி­னார் பிரியா பவானி

சங்­கர்.