வீட்டைப் போல 'கேரவன்'

வீட்டைப் போல 'கேரவன்'

1 mins read
3446720c-92d6-4b37-957f-e5a89927d19c
-

நடிகை கங்­கனா ரணா­வத் தனது 'கேர­வன்' வடி­வ­மைப்­புக்­காக ரூ. 65 லட்­சம் செலவு செய்­தி­ருப்­பது பல­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்தி உள்­ளது.

பாலி­வுட் பட உல­கில் முன்­னணி கதா­நா­ய­கி­யாக இருப்­ப­வர் நடிகை கங்­கனா ரணா­வத். தனது மன­தில் பட்­டதை யாருக்­கும் அஞ்­சா­மல் பேசு­வது அவ­ரது இயல்பு. அத­னால் அவர் ஆத­ர­வை­யும் எதிர்ப்­பை­யும் சம­மா­கவே சம்­பா­தித்து வரு­கி­றார்.

தமி­ழில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளி­யான 'தலைவி' படத்­தில் நடித்­தி­ருந்­தார். தற்பொழுது 'சந்­தி­ர­முகி' படத்­தின் இரண்­டாம் பாகத்­தில் நடித்­தி­ருக்­கி­றார். அண்­மை­யில்­தான் அந்­தப் படத்­திற்­கான படப்­பி­டிப்பு முடி­வ­டைந்­தது. தமி­ழில் மட்­டு­மின்றி இந்­தி­யி­லும் இந்­திரா காந்­தி­யின் வாழ்க்கை வர­லாற்று படத்­திலும் நடிக்­கி­றார் கங்­கனா.

இவர் படப்­பி­டிப்­புக்­குச் செல்­லும் இடங்­களில் ஓய்வு எடுக்க தனக்கு சொந்­த­மான கேர­வ­னில் தங்கி இருப்­பார். அதில் இருக்­கும்­போது வீட்­டில் இருக்­கும் உணர்வு ஏற்­பட வேண்­டும் என்­ப­தற்­காக சுமார் 65 லட்ச ரூபாய் செலவு செய்து மறு வடி­வ­மைப்பு செய்து இருக்­கி­றார்.

இந்தத் தக­வலை அம்­பானி குடும்­பம் மற்­றும் பல பாலி­வுட் நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு பல வச­தி­க­ளைச் செய்து வரும் கேத்­தன் ராவல் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இவர் மும்பை காவல் துறை­யி­லும் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. தற்­போது இந்­தத் தக­வல் பாலி­வுட் உல­கில் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.