'அவை கசப்பான நாள்கள்'

'அவை கசப்பான நாள்கள்'

3 mins read
70bf1530-7edb-4d76-b976-55a2bd1e2a4d
-

பணமா, புகழா என்ற கேள்வி எழும்­போது பணத்­துக்கு முக்கி­யத்­து­வம் அளிக்­கா­மல் இருக்கமுடி­யாது என்­கி­றார் நடிகை ஆத்­மிகா.

அண்­மை­யில் வெளி­யான 'கண்ணை நம்­பாதே' படத்­தில் இவ­ரது நடிப்பு விமர்­ச­கர்­க­ளால் பாராட்­டப்­பட்­டது. 'மீசைய முறுக்கு', 'கோடி­யில் ஒரு­வன்' படங்­க­ளைத் தொடர்ந்து மேலும் இரண்டு தமிழ்ப் படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

"எந்த விஷ­ய­மாக இருந்­தா­லும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வ­து­தான் எனது இயல்பு. அப்­ப­டித்­தான் காதல், திரு­ம­ணம், திரை­யு­ல­கப் பய­ணம் ஆகி­யவை குறித்து ஒரு பேட்­டி­யில் விரி­வா­கப் பேசி இருந்­தேன். அதை வைத்து சிலர் சர்ச்­சை­யைக் கிளப்பி உள்­ள­னர்.

"வாழ்க்­கை­யில் பணம்­தான் முக்­கி­யம் என்று நான் கூறி­ய­தாக செய்தி வெளி­யா­னது. ஒரு­வர் எப்­படி வேண்­டு­மா­னா­லும் சம்­பா­திக்­க­லாம். ஆனால் நியா­ய­மான முறை­யில் சம்­பா­திக்க வேண்­டும். உழைப்பு மூலம் கிடைக்­கும் பணம்­தான் நிம்­மதி தரும்.

"நாம் எல்­லோ­ரும் பணத்­துக்­காகத்­தான் கஷ்­டப்­ப­டு­கி­றோம். புகழா, பணமா என்று வரும்­போது பணத்துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கா­மல் இருக்கமுடியாது என்று நான் கூறி­யதை மறுக்க மாட்­டேன்.

"மனி­த­னின் அடிப்­ப­டைத் தேவைக்கு பணம் முக்­கி­யம். அதற்­காக நியா­ய­மான முறை­யில் உழைக்க வேண்­டும். 'கர்மா' என்­பது பணத்­துக்­கும் இருக்­கிறது என்­பதே என்­னு­டைய கருத்து. நல்ல முறை­யில் சம்­பா­திக்­கும் பணம்­தான் நம் கையில் தங்­கும்," என்­கி­றார் ஆத்­மிகா.

தமது காதல் விவ­கா­ரம் குறித்து பேசு­வ­தற்கு இனி ஒன்­றும் இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், பணம் சம்­பா­திக்­கவே தாம் திரை­யு­ல­குக்கு வந்­த­தாக முன்பு கூறி­யதை மாற்­றிக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யமில்லை என்­கி­றார்.

"நான் காதல்­வ­யப்­பட்­டது உண்­மை­தான். எ­னி­னும் அது நீண்ட நாள்­கள் நீடிக்­க­வில்லை என்­பதை முன்பே ஒளி­வு­ம­றை­வின்­றிக் கூறி­விட்­டேன். அந்த கசப்­பான நாள்­களை மறந்து இப்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளேன்.

"காதல் முறிவு கார­ண­மாக சில பாதிப்­பு­கள் இருந்­தன என்­ப­தும் உண்­மை­தான். நான் சில­வற்றை நம்­பி­னேன். ஆனால் அது தவறாகி­விட்­டது.

"நாம் உண்மை­யைப் பேசும்­போது சுற்றி இருப்­ப­வர்­களும் உண்­மை­யாக நடந்­து­கொள்­வார்­கள் என்றே நம்­பு­வோம். ஆனால் ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் சந்­தர்ப்­ப­வா­தி­க­ளாக மாறு­வார்­கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் எனது காத­லும் முறிந்­து­போ­னது.

"ஆனால் அதை நினைத்­துக் கவ­லைப்­ப­டா­மல் முன்­னே­றிச் செல்­கி­றேன். முதிர்ச்சி அடை­யும்­போ­து­தான் சில விஷ­யங்­கள் நமக்கு ஒத்­து­வ­ராது என்­பது நமக்­குப் புரி­யும். அவை நம்­மை­விட்­டுப் போகும் ­போ­து­தான் அவை நமக்­குச் சொந்­த­மில்லை என்­றும் அதை நினைத்து நாம் அழ வேண்­டி­ய­தில்லை என்­றும் புரி­யும்," என்­கி­றார் ஆத்மிகா.

மணி­ரத்­னம், வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவ்­வி­ரு­வ­ரின் படங்­களில் நடிக்­கும்­போது வாழ்­நாள் அனு­ப­வத்தை மொத்­த­மா­கப் பெறமுடி­யும் என நம்­புவ தா­கச் சொல்­கி­றார்.

"இயக்­கு­நர்­க­ளின் நாயகி என்று சொல்­வார்­களே, அப்­ப­டிப்­பட்ட நல்ல பெய­ரைச் சம்­பா­திக்க வேண்­டும் என்­ப­து­தான் எனது இலக்கு. பக்­கத்­து வீட்­டுப் பெண்­ணைப் போன்ற கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க பயிற்சி, ஒத்­திகை தேவைப்­ப­டாது. மற்ற கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­கும்­போது இயக்­கு­நர்­க­ளின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற வேண்­டும் என்­ப­தில்­தான் கவ­ன­மாக இருப்­பேன்.

"சில கதா­பாத்­தி­ரங்­கள் மட்­டுமே நம்­மி­டம் புதி­தாக எதிர்­பார்க்­கும். அப்­ப­டிப்­பட்ட வாய்ப்­பு­கள் அமை­யும்­போது கதா­பாத்­தி­ரத்தை நன்கு உள்­வாங்­கிக்­கொண்டு நடிப்­பேன்," என்று குறிப்பிடும் ஆத்­மிகா, இப்­போ­து­தான் நாய­கி­களுக்கு கௌர­வ­மான ஊதி­யம் கிடைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"எனக்கு இவ்­வ­ளவு சம்­ப­ளம் வேண்­டும் என்று கேட்­டுப்­பெ­றும் அள­வுக்கு நான் இன்­னும் பெரிய கதா­நா­ய­கி­யாக உரு­வெ­டுக்­க­வில்லை. எனி­னும் அத்தகைய உய­ரத்தை எட்­டிப்­பி­டிக்க வேண்­டும் என்ற கன­வும் இலக்­கும் மன­தில் உள்­ளது.

"எனி­னும் சம்­பள விஷ­யத்­தில் இப்­போது கிடைக்­கும் கௌர­வம் நீடிக்கவேண்­டும் என்­ப­தில் நாய­கி­கள் கவ­ன­மாக இருக்கவேண்­டும் என்­பதே எனது அறி­வுரை.

"நமக்கு நல்ல சம்­ப­ளம் கிடைத்­தால் போதும், மற்­ற­வர்­க­ளைப் பற்­றிய கவலை தேவை இல்லை என்று நினைத்­து­வி­டக்­கூ­டாது. நமக்­குப் பிறகு நடிக்க வரும் புது­மு­கங்­க­ளுக்­கும் பயன் அளிக்­கும் வகை­யில் நமது செயல்­பா­டு­கள் இருக்க வேண்­டும்," என்­கி­றார் ஆத்­மிகா.

"இன்­றைய சூழ­லில் தேடி வரும் வாய்ப்­பு­களை ஏற்­கும் நிலை­யில்­தான் கதா­நா­ய­கி­கள் உள்­ள­னர். அவர்களால் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான கதைக்­களங்­களைத் தேர்வு செய்ய முடி­வ­தில்லை. எனி­னும் ஒரு­சி­லர் விதி­வி­லக்­காக உள்­ள­னர்.

"எனவே கிடைத்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி நல்ல நடிகை என்று பெய­ரெ­டுக்க வேண்­டும். அதன்பிறகே மன­நி­றைவு தரும் பாத்­தி­ரங்­களை நோக்­கிச் செல்ல முடி­யும்," என்­கி­றார் ஆத்­மிகா.

, :

தமிழகத்  