திரைத் துளி­கள்

2 mins read
fb26bb43-662c-4160-918e-7d26584626db
-
multi-img1 of 3

 முன்பு 'மகாநதி' படத்தில் நடித்தபோது தன் மனதில் ஏற்பட்ட சில அதிர்வுகளை, அண்மையில் 'தசரா' படத்தில் நடித்தபோதும் உணர்ந்ததாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் மற்ற படங்களைவிட, தசரா படத்துக்கு மிக விரை வாக டப்பிங் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

"இப்படத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். எனவே வித்தியாசமான தெலுங்கு நடையில் பேச வேண்டி இருந்தது. இதற்காக தெலுங்கு பேராசிரியர் ஒருவரும் துணை இயக்குனர் ஒருவரும் பயிற்சி அளித்தனர். அதனால் என்னுடைய காட்சிகளுக்கான பின்னணிக் குரல் பதிவை ஆறு நாள்களிலேயே முடித்து விட்டேன். வழக்கமாக என்னுடைய படங்களுக்கு இதைவிட இன்னும் மூன்று நாள்கள் அதிகம் தேவைப்படும்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. ஏற்கெனவே தொண்டைப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமடைந்த அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு கால மானார். கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது, மாரடைப்பு ஆகியவற்றால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக வெளியான தகவலை உறுதி செய்ய மறுத்துவிட்டார் நடிகை அதிதி ராவ். இருவரும் அடிக்கடி பொது இடங்களில் ஜோடியாக வலம் வருகின்றனர். இது தொடர்பான பல புகைப் படங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகின்றன. இந்நிலையில் அண்மைய பேட்டியில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அதிதி ராவ், அனைவருடனும் பகிர வேண்டிய தகவல் ஏதும் இருப்பின் அதை தெரிவிப்பதில் தமக்குத் தயக்கம் இருக்காது என்றார்.

"நான் யாரையேனும் காதலிக்கிறேனா என்பது குறித்து ரசிகர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை எல்லோரிடமும் சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் நானே நிச்சயமாக சொல்வேன்," என்று அதிதி ராவ் மேலும் தெரிவித்துள்ளார்.