ஆண்டுக்கு ஒரு மொழி

ஆண்டுக்கு ஒரு மொழி

2 mins read
cd43e2fc-3e1b-47dc-870a-7283b5897a75
-

'அயோத்தி' படம் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மாகி உள்­ளார் பிரீத்தி அஸ்­‌ரானி. விமர்­ச­கர்­களும் ரசி­கர்­களும் தனது நடிப்பு நன்­றாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­யுள்­ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­லும் இந்த இளம் நாயகி, தமி­ழில் தொடர்ந்து நடிக்க விரும்­பு­வ­தா­கக் கூறு­கி­றார்.

பிரீத்தி குஜ­ராத் மாநிலத்­தைச் சேர்ந்­த­வர். எனி­னும், பெற்­றோர் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே ஹைத­ரா­பாத்­துக்கு குடி­பெ­யர்ந்­து­விட்­ட­னர்.

அத­னால் பள்­ளிப்படிப்பை அங்­கு­தான் மேற்­கொண்­டா­ராம். பள்­ளி­யில் படிக்­கும்­போதே பிரீத்­திக்கு சினிமா ஆசை வந்­து­விட்­டது. 'அயோத்தி' படத்­தில் பிரீத்­திக்கு தாயாக நடத்­துள்ள அஞ்சு அவ­ரது நெருங்கிய உற­வி­னர்.

"சிறு வய­தில் அஞ்சு அக்­கா­வு­டன்­தான் அதிக நேரம் இருப்­பேன். அவர் எங்கு சென்­றா­லும் நானும் அவ­ரு­டன் ஒட்­டிக்­கொள்­வேன். அவர் பல தெலுங்­குப் படங்­களில் நடித்­துள்­ளார்.

"அஞ்சு அக்கா மூலம்­தான் திரை­யு­ல­கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை தெரிந்­து­கொள்ள முடிந்­தது. பத்­தாம் வகுப்பு படித்து முடித்­த­துமே திரைப்­பட வாய்ப்­பு­கள் தேடி­வ­ரத் தொடங்­கின. பள்ளி, கல்­லூ­ரி­யில் படித்­துக்கொண்டே நடிக்­க­வும் செய்­தேன்," என்று சொல்­லும் பிரீத்தி, இது­வரை பத்து படங்­க­ளுக்­கும் மேல் நடித்­துள்­ளார்.

வளர்ந்­தது தெலுங்கு தேசத்­தில் என்­றா­லும் சர­ள­மா­கத் தமிழ் பேசு­கி­றார். தமி­ழ­கம் வந்­து­விட்­டால் தமி­ழில் மட்­டுமே பேசு­வா­ராம். யாரைப் பார்த்­தா­லும் 'வணக்­கம், எப்­படி இருக்­கி­றீர்­கள்' என்று தமி­ழில் நலம் விசா­ரிக்­கி­றார்.

"எனக்­குப் பல்­வேறு மொழி­களில் நடிக்க ஆசை. அத­னால், கூடு­மானவரை புதுப்­புது மொழி­கள் கற்­றுக்கொள்­வ­தில் ஆர்­வம் காட்­டு­கி­றேன்.

"இந்­தி­யத் திரை­யு­ல­கைச் சேர்ந்த பெரும்­பா­லா­ன­வர்­க­ள் தமிழ்ப் படங்­களில் பணி­யாற்ற வேண்­டும் என்ற ஆசை­யு­டன் இருக்­கி­றார்­கள். தமிழ் சினி­மா­வில் நடித்­தி­ருப்­பதை கூடு­தல் தகுதி, கௌர­வ­மா­கக் கரு­து­கி­றார்­கள். இதை யாரா­லும் மறுக்க இய­லாது. எனக்­கும் அந்த ஆசை இருந்­தது.

"நடிப்­பு­தான் எனது வாழ்க்கை என்று முடி­வெ­டுத்­த­துமே தமி­ழில் நடிக்­கும் வாய்ப்­புக்­கா­கக் காத்­தி­ருந்­தேன். கிடைத்த ஓய்வு நேரத்­தில் கைப்­பேசிச் செயலி மூல­மா­கவே தமிழ் கற்­றுக்­கொண்­டேன். இப்­போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்­ன­டம், மராத்தி உட்­பட எட்டு மொழி­கள் எனக்கு அத்­துப்­படி," என்று சொல்­லும் பிரீத்தி அஸ்­‌ரானி, ஆண்­டுக்கு ஒரு புது மொழி­யைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று முடிவு செய்­துள்­ளா­ராம்.

சரி, 'அயோத்தி' பட வாய்ப்பு எப்­ப­டிக் கிடைத்­தது?

"நான் இப்­ப­டத்­தில் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரத்­துக்­காக நடிப்­புத் தேர்வு நடை­பெற்­றது. அதில் நாற்­பது பேர் பங்­கேற்­ற­னர். ஆனால் இயக்­கு­நர் யாரை­யும் தேர்வு செய்­ய­வில்லை. அப்­போது இயக்­கு­நர் மந்­தி­ர­மூர்த்­தி­யி­டம் இருந்து எனக்கு அழைப்பு வந்­தது.

"எனக்­கும் தேர்வு வைத்­த­னர். அதில் தேர்ச்சி பெற்ற கையோடு படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பி­விட்­டோம். இந்­தப் படத்­தில் வடஇந்­தி­யப் பெண்ணாக நடித்­துள்­ளேன். அதற்­கேற்ற முகச்­சா­யல் இருந்­தது கூடு­தல் பல­மா­னது," என்­கி­றார் பிரீத்தி.

தாம் நடித்த படங்­களை திரை­ய­ரங்­கில் பார்ப்­ப­தும் ரசி­கர்­க­ளி­டம் கருத்து கேட்­ப­தும் மிக­வும் பிடிக்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், 'அயோத்தி' படத்­தைச் சென்னை­யில்­தான் பார்த்­தாராம். அப்போது ரசிகர்­கள் பாராட்­டித் தள்­ளி­ய­தில் திக்­கு­முக்­கா­டிப் போன­தா­கச் சொல்­கி­றார்.