தனது இரண்டாவது மனைவியையும் பிரிந்துவிட்டதாக வெளியான தகவலை நடிகர் விஷ்ணு விஷால் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமது அண்மைய சமூக ஊடகப் பதிவை சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் சோகமாகப் பதிவிட்டிருந்தார் விஷ்ணு விஷால்.
"பரவாயில்லை. நான் மீண்டும் முயற்சி செய்தேன். ஆனால் மீண்டும் தோற்றுவிட்டேன். மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போனமுறை ஏற்பட்டது தோல்வி அல்ல. அது என் தவறும் அல்ல. அது துரோகம், ஏமாற்றம்," என்பதே அந்தப் பதிவாகும்.
இதைக்கண்ட ரசிகர்கள் பலர் விஷ்ணு விஷால் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கருதினர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வந்த நிலையில், விஷ்ணு விஷால் விளக்கம் தந்துள்ளார்.
"சில நாள்களுக்கு முன் நான் வெளியிட்ட பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. அந்தப் பதிவு தொழில்ரீதியானது. சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல," என்று தெளிவுபடுத்தி உள்ளார் விஷ்ணு விஷால்.

