டுவிட்டர் கணக்கு முடக்கம்

டுவிட்டர் கணக்கு முடக்கம்

1 mins read
deda564a-9fae-4e5a-afd1-7e10ac999b36
-

நடிகை ஐஸ்­வர்யா ராஜே­ஷின் டுவிட்­டர் கணக்கு திடீ­ரென முடக்­கப்­பட்­டுள்­ளது.

இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் தனது கணக்­கில் ஊடு­ருவி இவ்­வாறு செய்­தி­ருப்­ப­தாகச் சொல்­கி­றார் ஐஸ்­வர்யா.

இதை­ய­டுத்து, தனது பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண உத­வு­மாறு டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி எலான் மஸ்க்­கி­டம் ஐஸ்­வர்யா கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அவ­ரது செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­யுள்­ளார்.

"கடந்த 24ஆம் தேதி முதல் ஐஸ்­வர்­யா­வின் டுவிட்­டர் கணக்கு வேலை செய்­ய­வில்லை. இந்த பிரச்­சி­னைக்கு விரை­வில் தீர்­வு­கா­ணப்­படும்.

"அது­வரை ஐஸ்­வர்­யா­வின் ரசி­கர்­களும் டுவிட்­ட­ரில் அவரைப் பின்­தொ­டர்பவர்களும் அவ­ரது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வி­டப்­படும் எதை­யும் கருத்­தில் கொள்ள வேண்­டாம்," என செய்­தித்­தொ­டர்­பா­ளர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

"அன்­புள்ள எலான் மஸ்க், நான் இந்­தி­யா­வி­லும் வெளி­நாட்டிலும் அதிக ரசி­கர்­க­ளைக் கொண்ட தென்­னிந்­திய நடிகை ஐஸ்­வர்யா ராஜே­ஷின் விளம்­ப­ர­தா­ரர். டுவிட்­ட­ரில் உங்­கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.

"ஐஸ்­வர்யா ராஜே­ஷின் கணக்கு முடக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சிக்­க­லைத் தீர்க்க உங்­கள் குழு­வின் உட­னடி உத­வியை நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்று டுவிட்­டர் நிர்­வா­கத்­துக்கு கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்ளதா­க­வும் அந்­தச் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­னார்.