'பத்து தல' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தில் நடித்த சிம்புவை முன்பு வலைத்தளத்தில் தவறாகப் பேசியதையும் ஆனால் சிம்பு அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் படத்தில் நடித்தது பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இன்று 'பத்து தல' படம் உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் மர்மம் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தினை கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஞானவேல் ராஜா படத்தைப் பற்றியும் சிம்புவைப் பற்றியும் பேசுகையில், "சிம்புவுக்கும் எனக்கும் நம்மைச் சுற்றி யாரை வைத்துக்கொள்ள வேண்டும்? யாரை வைத்துக்கொள்ளக் கூடாது?
என்பதைத் தீர்மானிப்பதில்தான் பிரச்சினை.
"சிம்பு பல விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறார். ஏன், நானே அவரை விமர்சனம் செய்திருக்
கிறேன்.
"திறமையான மனிதர் இப்படி இருக்கிறார் என்கிற ஆதங்கத்தில் அவர் நன்றாக வர வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போது அவருடைய வருகை அனைவரையும் திருப்திப்படுத்தி உள்ளது.
"நான் அவரை பொதுத் தளத்தில் விமர்சனம் செய்திருக்கிறேன். வேறு எந்த நடிகராக இருந்தாலும் எனக்கு வாய்ப்பளித்திருக்க மாட்டார்கள். அவர் எனக்கு வாய்ப்பளித்தார். அதுதான் சிம்பு.
"நான் பல சமயங்களில் சிம்பு
வுடன் இருந்திருக்கிறேன். அவர் யார் மீதும் பொறாமைப்பட்டோ அல்லது கவலையாகவோ இருந்து நான் பார்த்தது இல்லை. அவரிடம் நேர்
மறையான எண்ணங்கள் மட்டும்தான் இருக்கும்," என்று சிம்புவை புகழ்ந்து பேசினார்.
மேலும், "வில்லன் கதாபாத்திரத்திற்குப் புதுமையான ஆளைத் தேடினோம். இயக்குநர் கிருஷ்ணா, கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார்.
"கௌதம் மேனன் இயக்கத்தில்தான் படம் பண்ண முடியவில்லை, அவருடைய நடிப்பில் படத்தைத்
தயாரிக்கலாம் என்று நினைத்தேன். கௌதம் மேனனும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். கௌதம் கார்த்திக் எனக்குப் பிடித்தமான நாயகர்களில் ஒருவர். இந்தத் திரைப்படமும் இனி வெளி
வரும் திரைப்படங்களும் அவரது வெற்றிப் பாதைக்கு வழி அமைக்கும்.
"கௌதம் கார்த்திக்குக்கு எந்த இடத்திலும் தான் ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற நினைப்பு இருக்காது. அவர் வெளியில் காட்டும் முகம் வேறு. அவருடைய உண்மையான முகம் வேறு.
"ஏ.ஆர் ரஹ்மானுக்கு கிருஷ்ணா மீதும் சிம்பு மீதும் அலாதி பிரியம். அந்தப் பட்டியலில் நானும் இணைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்," என்றார் ஞானவேல்
ராஜா.