மீண்டும் 'சூப்பர் ஸ்டார்' பிரச்சினை

மீண்டும் 'சூப்பர் ஸ்டார்' பிரச்சினை

2 mins read

தமிழ் சினி­மா­வில் கடந்த சில மாதங்­க­ளா­கவே அடுத்த

'சூப்­பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வரு­கிறது. 'வாரிசு' பட விழா­வில் விஜய்யை சிலர் 'சூப்­பர் ஸ்டார்' என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதி­க­மா­னது.

இந்­நி­லை­யில் முதல்­மு­றை­யாக தனது நடிப்­பில் நடி­கர் ரஜி­னி­யின் சாயல் தென்­படும் என்று சிவ­கார்த்­தி­கே­யன் வெளிப்­ப­டை­யா­கப் பேசி உள்­ளது மீண்டும் பிரச்­சி­னை­யைக் கிளப்­பி­யுள்­ளது.

சிவ­கார்த்­தி­கே­யன் அடுத்து நடித்து வெளி­வர உள்ள படத்­தின் பெயர் 'மாவீ­ரன்'. அப்­பெ­ய­ரில் ரஜி­னி­காந்த் ஏற்கெனவே நடித்திருந்தார்.

அடுத்த 'சூப்­பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இன்­னும் முடி­யாத நிலை­யில், தன்­னி­டம் ரஜினி சாயல் இருப்­பது குறித்து சிவ­கார்த்­தி­கே­யன் பேசி­யி­ருப்­பது மறை­மு­க­மாக எதையோ சொல்ல வரு­வதுபோல இருக்கிறது என்று பேசத் தொடங்கி உள்­ள­னர்.

இதற்­கி­டை­யில் சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­தி­ருந்த 'மிஸ்­டர் லோக்­கல்' என்ற படத்தை ஞான­வேல் ராஜா தயா­ரித்து இருந்­தார்.

படத்­தில் நடிக்க சிவ­கார்த்தி­கே­ய­னுக்கு 16 கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்­டது. ஆனால் அவர் 11 கோடி ரூபாய் மட்­டுமே கொடுத்து இருக்­கி­றார். மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இது­வரை கொடுக்­கப்­ப­ட­வில்லை.

அதனால் தனது சம்­பள பாக்கி ரூ.4 கோடியை தனக்கு தரக்­கோரி சிவ­கார்த்­தி­கே­யன் தரப்­பில் ஞான­வேல் ராஜா மீது வழக்கு தொட­ரப்­பட்­டது.

இந்­நி­லை­யில் இந்த வழக்கு நீண்ட நாள்களாக விசாரணை யில் இருந்து வந்தது. நேற்று நீதி­மன்­றத்­தில் மீண்டும் இவ்வழக்கு விசா­ர­ணைக்கு

வந்­தது.

அப்­போது இரு தரப்­பும் சம­ர­சம் செய்­துக்கொள்­வ­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­த­னர். இதை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்­றம் வழக்கை முடித்து வைத்­தது.

இதற்­கி­டையே சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு கொடுக்க வேண்­டிய சம்­ப­ளம் பாக்­கியை தயா­ரிப்­பா­ளர் ஞான­வேல் ராஜா கொடுத்து­விட்­ட­தாக தற்­போது தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.