திரைத்துளிகள்

திரைத்துளிகள்

1 mins read
465c6c3c-4738-44fd-8465-3779e8915d13
-
multi-img1 of 3

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குநர்கள்

25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ளலாம். அல்லது விவசாயம் செய்துகொள்ளலாம். ஆனால், எக்காரணத்தைக்கொண்டும் அந்த இடத்தை விற்கக் கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் வெற்றிமாறன்.

நடிகர் ஆர்யா நடித்துக்கொண்டு இருக்கும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நாளை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட இருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படக்குழுவினர் நான்கு நாள்கள் தைவான் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் 'பொன்னியின் செல்வன் 2' படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனை முன்னிட்டு நடைபெறும் பட நிகழ்ச்சி நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் கமல்ஹாசன் தைவான் புறப்படுவார் என்று கூறப்படுகிறது.