மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதன் மூலம் கைதிகளிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி மதுரை சிறைத்துறை அதிகாரிகளிடம் புத்தகங்களை ஒப்படைக்கும்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் அவரைப் பாராட்டி உள்ளனர்.
மனதை உருக வைக்கும் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதும் எனது நீண்ட கால கனவு என்கிறார் ராஷி கன்னா.அண்மைக்காலமாக தன்னைச் சந்திக்கும் இளம் இயக்குநர்கள் பலரும் காதல் கதைகளை தான் சொல்கிறார்களாம்.
"ஆனால் அந்தக் கதைகளில் கொஞ்சம்கூட புதுமையான விஷயங்கள் இல்லை. அனைத்தும் ஒரே மாதிரியான காட்சியமைப்பைக் கொண்டுள்ளன. இதயத்தை தொடும் உணர்வுபூர்வமான விஷயங்கள் அவர்கள் சொன்ன காதல் கதைகளில் இல்லை," என்கிறார் ராஷி.
இளையராஜா இசையமைத்துள்ள இந்திப் படம் இன்று வெளியீடு காண உள்ளது. 'மியூசிக் ஸ்கூல்' என்ற தலைப்பில் உ ருவாகி உள்ள அந்தப் படத்தை பப்பா ராவ் பில்லாயி என்பவர் இயக்கி உள்ளார். ஸ்ரேயா கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடித்துள்ளனர். "ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகள், தங்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த சமூகத்தால் எந்த விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதையும் இசை மூலமாக அவர்கள் அதிலிருந்து எப்படி தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்பதையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி உள்ளது. இளையராஜாவின் இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது," என்கிறார் இயக்குநர்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார் சமந்தா. உடல் கோளாறுகளில் இருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் நடிக்க விரும்புவ தாகவும் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மீண்டும் முழுத் திறமையை வெளிப்படுத்தி நடிக்க விரும்புகிறேன். அதற்காகத் தான் இந்த ஓய்வு. நிச்சயம் மீண்டும் நடிக்க வருவேன்," என்று கூறியுள்ளார் சமந்தா.
அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்தும் ஆதர வும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புதான் தம்மை வழிநடத்தி வருவதாகவும் சமந்தா கூறுகிறார்.

