'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் சிறார்களையும் இளையர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றும் இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் சொல்கிறார் திரிஷா.
அப்படத்தில் அவர் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"இளம் பெண்கள் குழந்தைகள் உள்பட பலர் குந்தவை போலவே ஆடை அணிந்து புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தனர். அந்த புகைப்படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.
"பிறந்து ஒரு சில நாள்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு குந்தவை போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தனர். அதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்," என்கிறார் திரிஷா.
இதே படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், அந்த வேடம் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று கூறியுள்ளார்.
"இது எனது மனதுக்குப் பிடித்த படம். மணிரத்னம் இயக்கிய நிறைய படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன்.
"அவை அனைத்துமே மனதுக்கு நிறைவைத் தந்தன. ஆனால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் எனக்கு கொடுத்த நந்தினி கதாபாத்திரத்தை மறக்கவே இயலாது," என்கிறார் ஐஸ்வர்யா.

