'சூரியனும் சூரியகாந்தியும்' என்ற படத்தில் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ளார் அப்புக்குட்டி.
ரிதி உமையாள் நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் என மேலும் இருவர் நாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"சாதிக்க துடிக்கும் ஒருவனை சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள் எப்படியெல்லாம் தடுக்கிறது, அலைக்கழிக்கிறது என்பதுதான் கதைக்கரு. இதை உயிரோட்டத்தோடு படமாக்கி உள்ளோம். மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படமாக உருவாகி உள்ளது," என்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா.
ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைக்க திருவாரூர் ராஜா ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.
இந்தப் படத்தில் அப்புக்குட்டியின் நடிப்பு மிக யதார்த்தமாகவும் வியப்பளிக்கும் வகையிலும் இருப்பதாகப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர். அவருக்கு விருது கிடைக்கவும்கூட வாய்ப்பு உள்ளதாம்.

