பாடகர் வீட்டில் கொள்ளை

பாடகர் வீட்டில் கொள்ளை

1 mins read
1e35d639-cf0e-48eb-a04d-1f8b251b588e
-

பிர­பல பின்­ன­ணிப் பாட­கர் விஜய் ஜேசு­தாஸ் வீட்­டில் நகை­களைக் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

சுமார் அறு­பது பவுன் நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தாக அவர் காவல்­து­றை­யி­ல் புகார் அளித்­துள்­ளார்.

சென்னை அபி­ரா­ம­பு­ரத்­தில் வசித்து வரு­கி­றார் விஜய் ஜேசு­தாஸ். அந்த வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த தங்க நகை­களை யாரோ கடந்த ஆண்டு டிசம்­பர் மாதமே கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

எனி­னும், பிப்­ர­வரி மாத இறு­தி­யில்­தான் நகை­கள் மாய­மானது குறித்து விஜய் ஜேசு­தா­சுக்கு தெரிய வந்­துள்­ளது.

இந்த கொள்­ளைச் சம்­பவத்தில் வீட்­டுப் பணி­யா­ளர்­களுக்குத் தொடர்பு இருக்­க­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்கெனவே நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகள் திருடப்பட்ட நிலையில், விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை போனது திரையுலகத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.