'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்து தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்க திட்ட மிட்டுள்ளாராம் இயக்குநர் நெல்சன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து ஷிவ ராஜ்குமார், தெலுங்கில் இருந்து நடிகர் சுனில், இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராஃப் போன்ற பிரபலங்களை நடிக்க வைத்திருக்கிறாராம் நெல்சன். இதனால் 'ஜெயிலர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

