அடுத்த சில நாள்களில் தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என்றும் அதில் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்றும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
எனவே ரசிகர்கள் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'அன்பு' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார் பாலா. அதன்பிறகு, 'அம்மா அப்பா செல்லம்', 'காதல் கிசு கிசு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பியாகவும் நடித்துள்ள பாலா, இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் சகோதரர் ஆவார்.
அண்மையில் பாலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
இந்நிலையில், பாலா உருக்கமான காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
"அடுத்த சில தினங்களில் எனக்குப் பெரிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. சிகிச்சையின்போது நான் உயிரிழக்க நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
"ரசிகர்களின் பிரார்த்தனையால் நான் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது. பிறப்போ, இறப்போ கடவுள் முடிவு செய்வார்," என்று பாலா தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு 'மார்கழி திங்கள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் மகேந்திரன் 'நீலகண்டா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.

