சமூக ஊடகங்களில் பலர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவது வேதனை அளிப்பதாகச் சொல்கிறார் வாணி போஜன்.
தன்னையும் நடிகர் ஜெய்யையும் இணைத்து வெளிவரும் கிசுகிசுக்களை சினிமா ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வாணி. அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பதிலளித்தார்.
ஜெய்யும் வாணியும் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கலந்துரையாடலின்போது ஒரு ரசிகர் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
"நானும் ஜெய்யும் ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வருவதாக தகவல் பரவியதும் அவரிடமே இதுகுறித்து பேசினேன். அவருக்கும் எனக்கும் இடையே உறவு உள்ளது என்று ஊடகங்களில் எழுதி இருந்தால்கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி, இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்து வதாக எழுதியது மிகவும் கீழ்த்தரமான செயல். உண்மையைச் சொல்வதானால் இந்தத் தகவல் என் மனதை வெகுவாகக் காயப்படுத்தியது.
"திரையுலகில் கால்பதிக்கும் முன்பு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது முதல் கடுமையாக உழைத்து பணம் சேர்த்து, வங்கியிலும் கடன் பெற்றுத்தான் சென்னையில் சொந்த வீடு கட்டியுள்ளேன். அது எனது கனவு இல்லம். அந்த வீட்டில் யாரோ ஒருவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துகிறேன் என்று சொல்வது நியாயமா?
"இப்படிப்பட்ட கிசுகிசுக்களால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் எந்த அளவுக்கு வேதனை அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பொறுப்பாகச் செயல்படும் எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்," என்றார் வாணி போஜன்.
இதையடுத்து, கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
தற்போது 'செங்களம்' என்ற இணையத்தொடரில் நடித்து வருகிறார் வாணி. அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவரது வீட்டில் கொள்ளையடிக் கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மை இல்லையாம். வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லும் அளவுக்கு தம்மிடம் ஏராளமான நகைகளோ, ரொக்கப் பணமோ இல்லை என்றும் வாணி தெளிவுபடுத்தி உள்ளார்.
"என் வீட்டுக்குள் எளிதில் நுழைந்துவிட முடியாது. அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்துள்ளேன். என் வீட்டில் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறி நான் கதறி அழுவது போன்ற ஒரு காணொளிப் பதிவு அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. உண்மையில் அந்தக் காணொளியில் காணப்படுவது நான் நடித்த தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்றுள்ள காட்சி. அந்தக் காட்சியைப் பயன்படுத்தி வதந்தியை பரப்பி உள்ளனர்.
"இதேபோல் படப்பிடிப்பின்போது நான் சேலையை ஒழுங்குபடுத்தும்போது திருட்டுத்தனமாக அதைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது எனில், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது ஒருவித மன வியாதி. அப்படிப் பட்டவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதோ, பேசுவதோ இல்லை," என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
தற்போது மேலும் ஒரு இணையத்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள இவர், சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார்.
, :
தமிழகத்

